பெங்களூரூவில் ஆஜானின் போது அதிக ஒலியில் ஹனுமான் பாடல் வைத்ததாக கூறி தாக்கப்பட்ட கடைக்காரருக்கு ஆதரவாக நகரத் பேட்டையில் நடைபெற்ற மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்ட மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே, பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா உள்ளிட்ட 40 பேர் கைது செய்யப்பட்டனர்.
கடந்த மார்ச் 17ஆம் தேதி நாகரத்பேட்டையில் ஆஜானின் போது ஹனுமான் சாலிசா வாசித்ததாகக் கூறி முகேஷ் என்ற கடை உரிமையாளரை வன்முறை கும்பல் தாக்கியது. இதனையடுத்து அங்கு கடும் பதற்றம் நிலவியது. தாக்கப்பட்ட கடைக்காரருக்கு ஆதரவாக பாஜக, ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட இந்து அமைப்புகள் களத்தில் குதித்தனர்.
இந்த சம்பவத்தை கண்டித்து நாகரத்பேட்டையில் பாஜக மற்றும் இந்து அமைப்புகள் சார்பிர் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே, பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது குற்றவாளியை கைது செய்யக்கோரி அவர்கள் முழக்கங்கள் எழுப்பினர். இதனைத்தொடர்ந்து ஷோபா கரந்த்லாஜே, தேஜஸ்வி சூர்யா உள்ளிட்ட 40 பேரை போலீசார் கைது செய்தனர். தாக்குதல் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.