இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான மைதானங்களை ஆஸ்திரேலியா கிரிக்கெட் தேர்வு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இந்த ஆண்டு நவம்பரில் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்காக இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.
இந்த டெஸ்ட் தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட தொடர் என்பதால் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடருக்கான மைதானங்களை ஆஸ்திரேலியா கிரிக்கெட் தேர்வு செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி இந்த தொடரின் முதல் போட்டி பெர்த்திலும், இரண்டாவது போட்டி அடிலெய்டு ஓவல் மைதானத்திலும் நடைபெறவுள்ளது.
அதேபோல் மூன்றாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனின் தி கப்பா மைதானத்திலும், 4வது போட்டியான பாக்சிங் டே டெஸ்ட் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்திலும் நடைபெறவுள்ளது.
மேலும் இந்த தொடரின் கடைசி போட்டி சிட்னி கிரிக்கெட் மைதானத்திலும் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆஸ்திரேலியா கிரிக்கெட் அடுத்த சீசனுக்கான அட்டவணையை இன்னும் வெளியிடவில்லை. எனவே இந்த மாத இறுதியில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.