கஷ்டமான முடிவை எடுத்திருந்தாலும் அதை இஷ்டப்பட்டு எடுத்துள்ளேன் என பாஜகவில் இணைந்துள்ள தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
ஆளுநர் பதவியை ராஜினாமா செய்த பிறகு முதல்முறையாக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயம் வந்த தமிழிசைக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அண்ணாமலை முன்னிலையில் தமிழிசை சவுந்தரராஜன் மீண்டும் தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார்.
சென்னை கமலாலயத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, தமிழிசைக்கு உறுப்பினர் அட்டை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை,
கமலாலயத்தில் மீண்டும் நுழைந்ததற்காக இறைவனுக்கு நன்றி தெரிவிக்கிறேன். தலைவராக இருந்து ஆளுநராக மாறி தொண்டராக இறங்கி வந்துள்ளேன். தம்பியிடம் இருந்து அக்கா என்ற முறையில் மீண்டும் பா.ஜ.க உறுப்பினர் அட்டையைப் பெற்றிருக்கிறேன். கஷ்டமான முடிவை எடுத்திருந்தாலும் அதை இஷ்டப்பட்டு எடுத்துள்ளேன். ஆளுநர் பதவியை விட பாஜகவின் உறுப்பினர் என்ற பதவியே எனக்கு மிகப்பெரியது. ராஜ் பவனை விட்டு, மீண்டும் பாஜகவில், இணைந்தது மிகுந்த மகிழ்ச்சி எனத் தெரிவித்தார்.
பாஜகவில் வாரிசு அரசியல் இல்லை. பிற கட்சியில் வாரிசு அரசியல் உள்ளது. தாமரை வளர்ந்து வருகிறது. பாஜகவில் எல்லாருக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. களங்கத்தை துடைக்கவே, களத்தில் இருக்கிறோம். 18 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் போது ஏன் ஆளுநர் பதவியை அகற்ற வில்லை. எதிர்கட்சிகளாக இருக்கும் பொது ஏன் ஆளுநர் கதவை தட்டினாரகள் என கேள்வி எழுப்பினார். திமுக (ஈவிஎம்) மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் சதி செய்துதான் வெற்றி பெற்றார்களா? என்பதற்கு பதில் சொல்ல வேண்டும், பாஜக வென்றால் மட்டும் அவர்கள் கேள்வி கேட்கிறார்கள் எனத் தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினராக பொறுப்பேற்ற பின்னர், சபாநாயகராக பேச வேண்டும் எனத் தெரிவித்தார். திமுகவின் தேர்தல் அறிக்கை, வெற்று அறிக்கையாக நான் பார்கிறேன்.
இந்த தேர்தல் அறிக்கையை பார்த்தால், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்த அறிவிப்பு போல் இருக்கிறது. திமுகவின் தேர்தல் அறிக்கை தோல்வி அறிக்கை. கமலாலயத்தை, ஒரு ஆலயமாக கருதுகிறேன் எனத் தெரிவித்தார்.