2024 மக்களவைத் தேர்தலையொட்டி, திமுக தனது வேட்பாளர் பட்டியலை மார்ச் 20-ம் தேதி (புதன் கிழமை) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். இதில், தர்மபுரி, சேலம், பொள்ளாச்சி, கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர் ஆகிய மக்களவைத் தொகுதிகளுக்கு புதிய வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அந்த வகையில், தர்மபுரி எம்பி செந்தில் குமார், சேலம் எம்பி எஸ்.ஆர்.பார்த்திபன், பொள்ளாச்சி எம்பி சண்முகசுந்தரம், கள்ளக்குறிச்சி எம்பி கவுதம சிகாமணி, தஞ்சாவூர் எம்பி எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், தென்காசி எம்பி எம். குமார் ஆகியோருக்கு சீட் மறுக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த 5 பேரும் மிகவும் அதிருப்தியில் உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
‘