நடைபெற உள்ள மக்களவைத் தொகுதியில், திமுக மற்றும் அதிமுக இடையே 18 தொகுதிகளில் நேரடியாக மோதுகின்றன.
2024 மக்களவை தேர்தலில் திமுக மற்றும் அதிமுக நேரடியாக மோதும் தொகுதிகள் விவரம் தற்போது வெளியாகியுள்ளது.
அந்த வகையில், வட சென்னை, தென் சென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், அரக்கோணம், வேலூர் ஆகிய தொகுதிகளில் நேரடியாக போட்டியிடுகிறது.
இதேபோல், தர்மபுரி, திருவண்ணாமலை, ஆரணி , கள்ளக்குறிச்சி , சேலம் , ஈரோடு, நீலகிரி ஆகிய தொகுதிகளிலும் நேரடி போட்டி உள்ளது.
மேலும், கோவை, பொள்ளாச்சி, பெரம்பலூர், தேனி மற்றும் தூத்துக்குடி ஆகிய தொகுதிகளிலும் நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.