உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் தொடர்ந்து 7வது ஆண்டாக முதலிடம் வகிக்கிறது பின்லாந்து. இந்தியா 126-வது இடத்தில் உள்ளது.
ஐக்கிய நாடுகள் அமைப்பு இந்த ஆண்டிற்கான உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
ஆரோக்கியம், சுதந்திரம் மற்றும் ஊழலின்மை ஆகிய காரணங்கள் அடிப்படையில் 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
இதில் பின்லாந்து முதலிடம் பிடித்துள்ளது. பின்லாந்து தொடர்ந்து 7 வது ஆண்டாக முதலிடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக வெளியிட்டப்பட்ட பட்டியலில் இருந்து இந்த ஆண்டு முதன்முறையாக அமெரிக்காவும், ஜெர்மனியும் முதல் 20 மகிழ்ச்சியான நாடுகளில் இடம்பெறவில்லை. இவ்விரு நாடுகளும் 23 மற்றும் 24 வது இடத்தில் உள்ளன.
இந்த மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் பெரிய நாடுகள் எதுவும் சேர்க்கப்படவில்லை. இப்பட்டியலில் இஸ்ரேல் 5வது இடத்திலும், ஆஸ்திரேலியா 10 வது இடத்திலும் உள்ளது. மேலும் இந்தியா 126 வது இடத்திலும் உள்ளது.
அதேபோல், 2020 ஆம் ஆண்டிலிருந்து தாலிபான்கள் கட்டுப்பாட்டிற்குள் ஆப்கானிஸ்தான் வந்தது முதல் அங்குள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இப்பட்டியலில் கடைசி இடத்தை பிடித்துள்ளது ஆப்கானிஸ்தான்.