தமிழகத்தில் பாஜக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சென்னையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளுக்குமான தேர்தல் பங்கீட்டை தமிழக பாஜக வெற்றிகரமாக முடித்துள்ளது.
இதில், தமிழக பாஜக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது. கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் 19 தொகுதிகளில் போட்டியிடுகிறார்கள். இதில், தமாகா 3 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
கூட்டணி கட்சி வேட்பாளர்கள் 4 பேர் தாமரை சின்னத்தில் போட்டியிடுகின்றனர். 24 தொகுதி வேட்பாளர்கள் பட்டியலுடன் டெல்லி செல்கிறோம். பாஜக வேட்பாளர் பட்டியல் எந்த நேரத்திலும் வெளியாகலாம் என்றார்.