மத்திய அமைச்சரும், பாஜக தலைவருமான டாக்டர் ஜிதேந்திர சிங், உதம்பூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தும் இந்நிகழ்வில் உடன் இருந்தார். இந்த தொகுதிக்கு ஏப்ரல் 19-ம் தேதி முதல் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இந்த கட்டத்தில் 17 மாநிலங்கள் மற்றும் 4 யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 மக்களவை தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது.
பின்னர் செய்தியாளரிடம் பேசிய மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்,
“கதுவாவில் இவ்வளவு பெரிய பொதுக்கூட்டம் நடந்ததில்லை என்று நினைக்கிறேன். இது கதுவா மக்களின் ஆதரவின் வெளிப்பாடு. முதல்முறை வாக்காளர்கள் அனைவரிடமும் எதிர்பார்ப்புகள் உள்ளன.
“கடந்த 10 ஆண்டுகளில், PMGSY இன் கீழ் உதம்பூரில் சாலைகள் அமைக்கப்பட்டன. மூன்று மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. ஒரு வானொலி நிலையம் மற்றும் பாஸ்போர்ட் அலுவலகம் கூட இப்போது இங்கு திறக்கப்பட்டுள்ளன,” என்று தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி இந்த தொகுதிக்கு கடந்த 10 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது. முந்தைய காங்கிரஸ் அரசுகளால் முழுமையடையாமல் இருந்த பல திட்டகள், மற்றும் முடிக்கப்படதா கட்டிடங்கள் முடிக்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்தார்.