கர்நாடக சங்கீத வித்வான் டி.எம் கிருஷ்ணாவுக்கு சங்கீத கலாநிதி விருது வழங்க இசைக்கலைஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சென்னையை சேர்ந்தவர் கர்நாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா. இவர், ஒவ்வொரு மாதமும் ஏசுநாதர் மற்றும் அல்லா குறித்து கர்நாடக இசையில் பாடல்களை வெளியிடுவதாக அறிவித்திருந்தார். மேலும், கூத்து, பறையாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கும் முழு ஆதரவு தெரிவித்து இருந்தார்.
குறிப்பாக, தி.க. தலைவரான பெரியார் கருத்துகளுக்கு ஆதரவாகவும் பிராமணர்களுக்கு எதிராகவும், கர்நாடக இசை உலகம் அனைவரையும் உள்ளடக்கியதாக இல்லை என்றும், கர்நாடக இசைக் கலைஞர்களை ஜாதி வெறியர்கள் என்றும் விமர்ச்சனம் செய்துள்ளார் என கூறப்படுகிறது.
இந்த நிலையில், இந்தாண்டு சென்னை மியூசிக் அகாடமி சார்பில், சங்கீத கலாநிதி விருதுக்கு டி.எம்.கிருஷ்ணா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதற்கு, பிரபல இசைக் கலைஞர் ரஞ்சனி – காயத்ரி உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதேபோல், பலரும் இந்தாண்டு கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என அறிவித்துள்ளனர்.