ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தங்களின் ஜெர்சியை மாற்றிய நிலையில் விழிப்புணர்வு ஜெர்சியையும் மாற்றியுள்ளது.
இந்தியன் பிரீமியர் லீக்கின் 17-வது சீசன் வரும் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதில் மொத்தமாக 10 அணிகள் பங்குபெறுகின்றன.
அதில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் டைட்டன்ஸ்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் பங்குபெறுகின்றன.
ஐ.பி.எல். தொடருக்காக அனைத்து அணிகளும் தற்போது தங்களது வீரர்களை ஒன்றிணைத்து தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றன.
முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது.
ஐ.பி.எல். தொடருக்காக அனைத்து அணிகளும் தற்போது தங்களது வீரர்களை ஒன்றிணைத்து தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றன.
இந்த நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முதலில் தங்களின் லோகோ, பெயர் மற்றும் ஜெர்சியை மாற்றியது.
இந்நிலையில் தற்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தங்களின் விழிப்புணர்வு ஜெர்சியையும் மாற்றியுள்ளது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர்கள் பசுமை மற்றும் சுற்றுசூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஒரு போட்டியில் பிரத்யேகமாக பச்சைநிற சீருடையை அணிந்து விளையாடுவது வழக்கம்.
இதன்படி இந்த சீசனுக்கான பச்சை நிற சீருடை அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் பெங்களூரு கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ், விராட் கோலி, மேக்ஸ்வெல், முகமது சிராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.