ஆஸ்திரேலியாவில் பேக்கரி ஒன்றில் திருடுவதற்காக சென்ற இளம்பெண் ஒருவர் திருடுவதற்கு முன்பாக பேக்கரி முன்பு யோகாசனம் செய்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் பிலிப்பா’ஸ் பேக்கரி நிறுவனம் ஒன்று நடைபெறு வருகிறது. அந்த பேக்கரியில் திருட்டு சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.
அந்த சம்பவத்தில், பெண் ஒருவர் திருடுவதற்குமுன் ‘யோகா’ பயிற்சியில் ஈடுபட்டது கண்காணிப்பு கேமராவில் பதிவுகள் மூலம் தெரியவந்தது.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் பேக்கரி ஒன்றில் திருடுவதற்காக சென்ற இளம்பெண் ஒருவர் திருடுவதற்கு முன்பாக பேக்கரி முன்பு யோகாசனம் செய்துள்ளார்.
இதுதொடர்பான வீடியோக்கள் அங்கிருந்த சி.சி.டி.வி. காட்சியில் பதிவாகி உள்ளது. ‘மிஷன் இம்பாசிபிள்- கோஸ்ட் புரொடோகால்’ ஒலிப்பதிவின் பின்னணி இசையுடன் கூடிய அந்த வீடியோவில் பெண் ஒருவர் கருப்பு நிற ஆடை அணிந்து கொண்டு யோகாசனம் செய்யும் காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்த சம்பவம் கடந்த 3 ஆம் தேதி நடைபெற்றுள்ளது. யோகாசனம் செய்த பிறகு அந்த பெண் பேக்கரிக்குள் நைசாக நுழைந்து அங்கிருந்த பொருட்களை திருடி சென்றுள்ளார்.
இதற்கிடையே சி.சி.டி.வி. காட்சிகள் மூலம் போலீசார் விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட பெண்ணை கைது செய்துள்ளனர்.
அந்தப் பெண் பாதாம் ‘குரோய்சான்’, காலணி, தூய்மைப்படுத்த உதவும் பொருள்கள் ஆகியவற்றைத் திருடியதாக நேற்று ஆஸ்திரேலியக் காவல்துறை தெரிவித்தது.
அவர்மீது திருட்டு, பூட்டிய இடத்தில் புகுந்து திருடியது, திருடத் தேவையான பொருள்களுடன் திருடச்சென்றது ஆகியவை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.