தமிழகத்தில் பாஜக, திமுக, அதிமுக ஆகிய மூன்று கட்சிகள் மோதும் தொகுதிகள் விவரம் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் சற்று முன்பு தமிழகத்தில் போட்டியிடும் பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து,முதற்கட்டமாக 3 தொகுதியில் மும்முனைப்போட்டி நிலவுகிறது.
இதில், கோவையில், பாஜக சார்பில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அதிமுக சார்பில் சிங்கை ராமசந்திரன், திமுக சார்பில் கணபதி ராஜ்குமார் போட்டியிடுன்றனர்.
இதேபோல, தென் சென்னையில், பாஜக சார்பில், முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனும், திமுக சார்பில் தமிழச்சி தங்கப்பாண்டியனும், அதிமுக சார்பில் ஜெயவர்தனும் போட்டியிடுகிறார்கள்.
மேலும், நீலகிரி (தனி) தொகுதியில், பாஜக சார்பில் மத்திய இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன், திமுக சார்பில் ஆ.ராசா, அதிமுக சார்பில் லோகேஷ் தமிழ்செல்வன் ஆகியோர் களம் காண்கிறார்கள்.
இதனால், இந்த மூன்று தொகுதியில் மும்முனைப் போட்டி நிலவுகிறது.