மும்பை அணியின் நட்சத்திர வீரரான சூர்யகுமார் யாதவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிஎஸ்கே அணியின் புதிய கேப்டன் ருத்ரஜிக்கு வாழ்த்து கூறியுள்ளார் ஆனால் இதுவரை அவர், அவர் அணியின் வீரர் ஹர்திக் பாண்டியாவுக்கு வாழ்த்து கூறவில்லை.
இந்தியன் பிரீமியர் லீக்கின் 17-வது சீசன் வரும் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதில் மொத்தமாக 10 அணிகள் பங்குபெறுகின்றன.
அதில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் டைட்டன்ஸ்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் பங்குபெறுகின்றன.
ஐ.பி.எல். தொடருக்காக அனைத்து அணிகளும் தற்போது தங்களது வீரர்களை ஒன்றிணைத்து தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகின்றன.
முதல் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இன்று ஐபிஎல் தொடரின் அனைத்து கேப்டன்களையும் ஒன்றிணைத்து கோப்பையுடன் புகைப்படம் எடுக்கப்பட்டது. அதில் சிஎஸ்கே அணியின் கேப்டனாக ருத்ராஜ் கெய்க்வாட் இருந்தார்.
பின்னர் அதிகாரபூர்வமாக ருத்ராஜ் கெய்க்வாட் கேப்டனாக நியமிக்கப்பட்டதாக அறிவிப்பு வந்தது. சிஎஸ்கே அணியின் ரசிகர்களே ருதுராஜ் கெய்க்வாட்-க்கு வாழ்த்து கூறி வருகின்றனர். சிஎஸ்கே அணியின் ரசிகர்கள் மட்டுமல்லாமல் நட்சத்திர வீரர்கள் பலரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.
அந்த வகையில் மும்பை அணியின் நட்சத்திர வீரரான சூர்யகுமார் யாதவ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நீ மிகப்பெரிய ஜாம்பவானின் இடத்தை நிரப்ப வேண்டும் என்பதில் மாற்று கருத்தில்லை.
ஆனால் உனது அமைதியான குணத்தின் மூலமாக சிஎஸ்கே அணியின் புகழையும், பாரம்பரியத்தையும் அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்வாய் என்ற நம்பிக்கை உள்ளது. அதிர்ஷ்டமும் உன்னுடன் இருக்க வாழ்த்துகள் என்று பதிவிட்டுள்ளார்.
ருதுராஜ் கெய்க்வாட் கேப்டனாக நியமனம் செய்யப்பட்ட 5 நிமிடத்திலேயே மும்பை அணியின் சூர்யகுமார் யாதவ் வாழ்த்தி இருக்கிறார்.
ஆனால் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டு 4 மாதங்களுக்கு மேலாகியும் ஹர்திக் பாண்டியா பற்றி இதுவரை சூர்யகுமார் யாதவ் இதுவரை எந்த கருத்தும் கூறவில்லை. இதன் மூலமாக மும்பை அணியின் கேப்டன்சி விவகாரத்தால் மோதல் ஏற்பட்டுள்ளது வெளிப்படையாக தெரிய வந்துள்ளது.