உயிரணுக்களில் இருந்து எய்ட்ஸ் நோயை உண்டாக்கும் எச்.ஐ.வி வைரஸை நீக்க முடியும் என விஞ்ஞானிகளின் கண்டுபிடித்துள்ளனர்.
மரபணு எடிட்டிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, பாதிக்கப்பட்ட உயிரணுக்களில் இருந்து எய்ட்ஸ் நோயை உண்டாக்கும் எச்.ஐ.வி வைரஸை வெற்றிகரமாக அகற்றியிருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கின்றனர்.
இது ‘க்ரிஸ்ப்ர்’ என்றழைக்கப்படும் மரபணு எடிட்டிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திச் செய்யப்பட்டிருப்பதாக அவர்கள் கூறினர்.
இந்தத் தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்த இரண்டு பெண் விஞ்ஞானிகளுக்கு 2020 ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
இத்தொழில்நுட்பம் மூலக்கூறுகளை வெட்டும் ஒரு கத்தரிக்கோலைப் போல வேலை செய்கிறது. அது டி.என்.ஏ.வை வெட்டுகிறது.
எனவே இதைப் பயன்படுத்தி உயிரணுவின் ‘மோசமான’ பகுதிகளை வெட்டி அகற்றலாம் அல்லது செயலிழக்கச் செய்யலாம். இதன்மூலம், உடலில் இருந்து எச்.ஐ.வி வைரஸை முழுவதுமாக அகற்றுவதே குறிக்கோளாகும்.