2024 மக்களவைத் தேர்தல் திருவிழா களைகட்டி வருகிறது. நாடு முழுவதும் ஜூன் 4-ம் தேதி தொடங்கும் தேர்தல், ஏப்ரல் 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது.
ஆனால், தமிழகத்தில் மட்டும் ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இந்த நிலையில், அசம்பாவிதங்களை தடுக்க டாஸ்மாக் கடைகளை மூட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ஏப்ரல் 17-ம் தேதி மாலை 6 மணி முதல், ஏப்ரல் 19-ம் தேதி மாலை 6 மணி வரை டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு இருக்கும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.
மேலும், வாக்குப்பதிவு எண்ணிக்கை நாளான ஜூன் 4-ம் தேதி டாஸ்மாக் கடை மூடப்படும் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதனால், பெரிய அளவில் அசம்பாவிதம் தவிர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.