உலகக்கோப்பை கால்பந்து தகுதிச்சுற்றில் இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி ட்ராவில் முடிந்துள்ளது.
2026 ஆண்கள் உலகக்கோப்பை கால்பந்து தொடர் அமெரிக்கா, மெக்சிகோ, கனடாவில் நடைபெறவுள்ளது. அதற்கான ஆசிய மண்டல தகுதி சுற்றின் 2 வது சுற்றில் 36 அணிகள் பங்கேற்றுள்ளன.
36 அணிகளும் 9 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு தங்களுக்குள் தலா 2 முறை லீக் போட்டியில் விளையாடவுள்ளன. இதன் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் 3 வது சுற்றுக்கு முன்னேறும்.
இந்தியா ‘ஏ’ பிரிவில் கத்தார், குவைத் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுடன் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற இந்திய அணிக்கான முதல் போட்டியில் இந்தியா ஆப்கானிஸ்தானுடன் விளையாடியது.
மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் இரண்டு அணிகளும் கடைசிவரை கோல் எதுவும் அடிக்காமல் இருந்தது. இதனால் இந்த போட்டி ட்ராவில் முடிந்தது.
உலகக்கோப்பை தகுதிச்சுற்று புள்ளி பட்டியலில் முதல் இடம் பெறும் அணி மூன்றாவது கட்ட தகுதிச்சுற்றுக்கு முன்னேறும். இதுவரை 3 போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி தலா ஒரு வெற்றி, தோல்வி மற்றும் சமன் என 4 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது.
இதில் கத்தார் அணி 9 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், குவைத் அணி 3 புள்ளிகளுடன் 3 வது இடத்திலும் உள்ளது. அதேபோல் ஆப்கானிஸ்தான் 1 புள்ளியுடன் நான்காவது இடத்தில் உள்ளது.