மேற்கு வங்க அமைச்சர் சந்திரநாத் சின்ஹா இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான அமைச்சரவையில் சிறு, குறு தொழில் மற்றும் ஜவுளித்துறை அமைச்சராக பதவி வகிப்பவர் சந்திரநாத் சின்ஹா. இவரது இல்லம் பிர்பூம் மாவட்டம் போல்பூரில் உள்ளது.
இந்நிலையில் அவரது இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று சோதனை நடத்தி வருகின்றனர். அப்போது அமைச்சர் இல்லத்தில் இல்லை என கூறப்படுகிறது.
பள்ளிகளுக்கு ஊழியர்கள் நியமனம் செய்யப்பட்டதில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக சோதனை நடைபெறுவதாக கூறப்படுகிறது.