இந்தியன் பிரீமியர் லீக்கின் 17-வது சீசன் இன்று தொடங்கவுள்ளது. இன்றையப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது.
ஐபிஎல் தொடரின் அறிவிப்பு வந்தது முதல் பல வீரர்களுக்கு காயம் ஏற்பட்டு வந்தது. காயம் காரணமாக பல வீரர்கள் ஐபிஎல் தொடரில் இருந்து விலகினர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் காயம் காரணமாக டெவோன் கான்வே மே மாதத்தில் தான் அணியில் இணைவார் என்று கூறப்பட்டது. அதேபோல் நட்சத்திர பேட்ஸ்மேனான சிவம் துபேவுக்கு காயம் ஏற்பட்ட நிலையில் சமீபத்தில் அணியில் இணைந்தார்.
அந்த வகையில் நட்சத்திர பந்துவீச்சாளரான இலங்கை வீரர் மதீஷா பத்திரனா வங்கதேசத்திற்கு எதிரான 2 வது டி20 தொடரின் போது அவர் காயில் எ கிரேட் காயம் ஏற்பட்டது.
இதனால் சிஎஸ்கே அணியில் இணையாமல் இருந்தார். ஆகையால் ரசிகர்களும் வருத்தத்தில் இருந்தனர். அவர் இபோது அணியில் இணைவார் என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் இருந்தது.
The answer to "Where's Pathirana"
He is fit and ready to throw Thunder ⚡ balls. Be ready 💣.
Finally a 📸 together with the Legend @matheesha_9 😄 #WhistlePodu #csk #IPL2024 pic.twitter.com/JKsv9gacWm— Amila Kalugalage (@akalugalage) March 22, 2024
இந்நிலையில் அவர் எப்போது அணியில் இணைவார் என்பது குறித்த அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. மதீஷா பத்திரனாவின் மேனேஜர் அமிலா கலுகலேகே தனது எக்ஸ் பதிவில் மதீஷா பத்திரனா உடல் தகுதி குறித்து அறிவிப்பு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
இது குறித்து அவர், ” பதிரனா எங்கே என்ற கேள்விக்கு பதில் இது தான். பிட்டாகியுள்ள அவர் இடியைப் போன்ற பந்துகளை வீசுவதற்கு தயாராகியுள்ளார். அவரை எதிர்கொள்ள தயாராக இருங்கள். ஒரு வழியாக நாங்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டோம்” என அவருடன் எடுத்த புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.