இந்தியன் பிரீமியர் லீக்கின் 17-வது சீசன் இன்று தொடங்கவுள்ளது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்குபெறுகின்றன.
இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் டைட்டன்ஸ்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் பங்குபெறுகின்றன.
இன்றையப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ளது.
இந்நிலையில் தற்போது குஜராத் அணியால் ரூ. 3.6 கோடிக்கு வாங்கப்பட்ட ராபின் மின்ஸ் என்ற இளம் இந்திய வீரரும் நடப்பு ஐ.பி.எல் தொடரில் இருந்து விலகியுள்ளார்.
இந்நிலையில் குஜராத் அணியில் ராபின் மின்ஸ்-க்கு பதிலாக கர்நாடகாவை சேர்ந்த விக்கெட் கீப்பர், பேட்ஸ்மேனான பி.ஆர். ஷரத் அவரது அடிப்படை விலையான ரூ.20 லட்சத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் குஜராத் அணி தனது முதல் போட்டியை வரும் 24 ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது.