அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் மீது தேர்தல் பறக்கும் படையினர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அதிமுக சார்பில் வேளச்சேரி காந்தி சாலையில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. இதில், தென்சென்னை அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் மற்றும் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து காெண்டனர்.
அப்போது, பொதுமக்களுக்கு இடையூறாக கட்சி கொடிகளை கட்டியதுடன் முறையான அனுமதியின்றி கூட்டம் நடத்தியதாக பறக்கும் படையினர் போலீசாரிடம் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
















