ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் ராக் இசை நிகழ்ச்சியின் போது நடந்த தாக்குதலை தீவிரவாத தாக்குதல் என ரஷ்ய அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்த துயர சம்பவத்திற்கு பாரத பிரதமர் மோடி மற்றும் உலக நாட்டு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள அரங்கம் ஒன்றில் ராக் இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு அதிரடியாக நுழைந்த ஆயுதமேந்திய ISIS தீவிரவாத கும்பல் தாக்குதலில் ஈடுபட்டது. இதில் சுமார் 60 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
கடந்த 25 ஆண்டுகளில் ரஷ்யாவின் மாஸ்கோவில் நடந்த தாக்குதல்கள் இங்கே.
அடுக்குமாடி கட்டிடத்தில் குண்டுவெடிப்பு, 118 பேர் பலி (1999)
1999-ம் ஆண்டு செப்டம்பர் 13ம் தேதி அதிகாலை அன்று ரஷ்யாவின் தென் மாஸ்கோவில் உள்ள எயிட்- ஸ்டோரே அடுக்குமாடி கட்டிடத்தில் குண்டுவெடிப்பு ஏற்பட்டது. இதில் 118 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது
இது, இதுவரை ரஷ்யாவின் தென் மாஸ்கோவில் நிகழ்த்த 5 தாக்குதல்களில் ஒன்றாகும். இந்த 5 தாக்குதலுமே ரஷ்யாவின் தென் மாஸ்கோ பகுதியில் 2 வாரக்காலத்தில் நிகழ்ந்துள்ளது. மொத்தம் 293 பேர் இதில் தங்கள் வாழ்வை இழந்தனர்.
மேலும் இந்த தாக்குதலுக்கு,செச்சினியாவின் வடக்கு காகசஸ் குடியரசின் முஸ்லிம் பிரிவினைவாதிகள் மீது மாஸ்கோ இந்த தாக்குதல்களுக்கு குற்றம் சாட்டியுள்ளது.
இந்த செச்சினியாவின் வடக்கு காகசஸ் குடியரசின் முஸ்லிம் பிரிவினைவாதிகளை அடியோடு அழிக்க ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புதின் ஒரு பிரச்சாரத்தை தொடங்குகிறார்.
தியேட்டர் பணயக்கைதிகள் சம்பவம், 130 பேர் கொல்லப்பட்டனர் (2002)
அக்டோபர் 23, 2002 அன்று மாஸ்கோவில் உள்ள டுப்ரோவ்கா திரையரங்கிற்குள் ஒரு இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த போது சுமார் 19 பெண் மற்றும் 21 ஆண் செச்சென் கிளர்ச்சியாளர்கள் நுழைந்து 800 க்கும் மேற்பட்டவர்களை பணயக்கைதிகளாக பிடித்தனர். இதில் செச்சென் கிளர்ச்சியாளர்களுக்கும், பணயக்கைதிகளுக்கும் இடையிலான மோதல் 3 நாள் நீடித்தது. தாக்குதல் நடத்தியவர்களை முறியடிக்க பாதுகாப்புப் படையினர் தியேட்டருக்குள் வாயுவை செலுத்தி அதன் பிறகு உள்ளே நுழைந்தபோது இது முடிவுக்கு வந்தது. ஆனால் இந்த சம்பவத்தில் மொத்தமாக 130 பணயக்கைதிகள் கொல்லப்பட்டனர். அவர்களில் பெரும்பாலோர் வாயுவில் மூச்சுத் திணறலால் உயிரிழந்தனர்.
ராக் கச்சேரி தாக்குதல், 15 பேர் கொல்லப்பட்டனர் (2003)
ஜூலை 5, 2003 அன்று இரண்டு பெண்கள் மனித வெடிகுண்டாக மாஸ்கோவிற்கு அருகிலுள்ள துஷினோ விமானநிலையத்தில் ராக் இசை நிகழ்ச்சியின் போது தங்களைத் தாங்களே வெடிக்கச் செய்தனர். இந்த தாக்குதலில் 15 பேர் உயிரிழந்தனர் மற்றும் 50 பேர் காயமடைந்தனர். அவர்கள் இரண்டு பேரும் செச்சென் பிரிவினைவாதிகள் என ரஷ்யாவால் அடையாளம் காணப்பட்டனர்.
மெட்ரோ குண்டுவெடிப்பு, 41 பேர் பலி (2004)
பிப்ரவரி 6, 2004 அன்று, மாஸ்கோ சுரங்கப்பாதையில், காலை அவசர நேரத்தில், அதிகம் அறியப்படாத செச்சென் குழுவால் வெடிகுண்டு வெடிக்கப்பட்டது, இதில் 41 பேர் கொல்லப்பட்டனர்.
மெட்ரோ தற்கொலை குண்டுவெடிப்பு, 40 பேர் பலி (2010)
மார்ச் 29, 2010 அன்று இரண்டு பெண்கள் மனித வெடிகுண்டாக மாஸ்கோ சுரங்கப்பாதையில் தங்களைத் தாங்களே வெடிக்கச் செய்தனர். இதில் ஒரு பெண் லுபியங்கா நிலையத்தை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 40 பேர் கொல்லப்பட்டனர். மற்றொரு பெண், FSB உளவுத்துறை சேவைகளின் தலைமையகம் குறிவைத்தனர்.
விமான நிலையத்தில் தற்கொலை குண்டுத் தாக்குதல், 37 பேர் பலி (2011)
ஜனவரி 24, 2011 அன்று ஒரு பெண் மனிதவெடிகுண்டாக மாஸ்கோ டோமோடெடோவோ சர்வதேச விமான நிலையத்தின் வருகை மண்டபத்தைத் தாக்கினார், இதில் 37 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு காகசஸ் எமிரேட் குழு பொறுப்பேற்றுள்ளது.
இதில் நேற்று நடைபெற்ற ரஷ்ய தலைநகர் மாஸ்கோவின் ராக் இசை நிகழ்ச்சி குண்டுவெடிப்பு சம்பவமும் குறிப்பிடத்தக்கது.
















