ஜனநாயகத்தை பற்றி பேசுவதற்கு ஸ்டாலினுக்கு உரிமை இல்லை எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோவை நாடாளுமன்ற தொகுதியில் பா.ஜ.க சார்பில் அக்கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். நேற்று முதல் அண்ணாமலை கோவை தொகுதியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் இன்று கோவை சரவணம்பட்டியில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் மாநில பாஜகத் தலைவர் அண்ணாமலை பங்கேற்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை,
2019 ல் அளித்த 295 வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி உள்ளோம். திமுகவை போல் சொன்ன விஷயத்தை திரும்ப பா.ஜ., சொல்லாது. மோடி செய்தது, பாஜ செய்தது மக்களுக்கு தெரியும்.
கம்யூனிஸ்ட் எம்.பி., வளர்ச்சி வேண்டாம் என பிடிவாதமாக உள்ளார். மற்றொரு வேட்பாளரின், கமிஷன் வாங்குவதற்காக மட்டுமே பாலம் கட்டும் கட்சியைச் சேர்ந்தவர். ஊழல் செய்வதற்காக மட்டுமே ஆட்சியில் இருந்த கட்சி வளர்ச்சி பற்றி பேசுகிறது. கோவையில் கொள்ளையடிப்பதற்காக, கமிஷன் பெறுவதற்காக வளர்ச்சி என்ற வீக்கத்தை காட்டி கொண்டுள்ளனர்.
மத்திய அரசுக்கும், கோவை மக்கள் இடையே ‛ ஹாட்லைன் ‘ ஆக இருப்பேன். மக்களுக்கும் மத்திய அரசுக்கும் இடையே இணைப்பு பாலமாக இருந்து திட்டங்களை வேகமாக செயல்படுத்துவோம் எனத் தெரிவித்தார்.
“பணம் செலவிட மாட்டேன் என நான் பேசியதை இபிஎஸ் முழுமையாக கேட்கவில்லை. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கொள்ளையடித்தவர்கள் என்னை விமர்சிக்க கூடாது. டீ கூட அடுத்தவர் பணத்தில் குடிப்பவர் இபிஎஸ்.
10 ஆண்டுகள் அமைச்சராக இருந்து மக்கள் பணத்தை கொள்ளையடித்தால் வளர்ச்சியா?
குளமையான இருந்த கோவையில் 2 டிகிரி வெப்பம் உயர திராவிடக் கட்சிகளே காரணம்.
ஏப்ரல் 10-க்கு பிறகு திமுக அதிமுக பங்காளி கட்சிகள் ஒன்று சேர்வார்கள். தேர்தலின் போது என்னை தோற்கடிக்க இரு கட்சிகளும் ஒன்று சேர்ந்து போராடுவார்கள்.” என்று தெரிவித்தார்.
பா.ஜ., சார்பில் யாரும் ஒப்பந்ததாரர்கள் இல்லை.அதிமுக ஆட்சியில் சம்பாதித்த பணம் யார் கையில் இருக்கிறதோ அவர்கள் வேட்பாளர்களாக அதிமுக சார்பில் இறங்கி உள்ளனர்.
செங்கலை கையில் எடுத்து, செங்கலை பாருங்கள் என சொல்லும் அளவுக்கு தான் உதயநிதிக்கு அறிவு இருக்கிறது. அரசியலில் பக்குவப்படாதவர்கள், அறிவு இருக்கக்கூடியவர்கள் மக்களுக்கு சமுதாய பணி செய்பவர்கள் யாரும் வராமல், தாத்தா, அப்பா இன்ஷியல் மட்டும் வைத்து கொண்டு அரசியலுக்கு வந்தால், செங்கலை தூக்கி வந்து, செங்கலை காட்டும் புத்தி மட்டும் இருக்கும். 2026ம் ஆண்டின் முதல்பகுதியில் எய்ம்ஸ் வரும் என உறுதி அளித்துள்ளோம்.
கருணாநிதி குளித்தலை தேர்தலில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. 33 மாதமாக செய்த சாதனையை சொல்லவில்லை. எதிர்மறை அரசியல் செய்கின்றனர். மக்கள் இவர்களுக்கு பாடம் புகட்டுவார்கள்.
திமுக, மத்திய அரசு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் 30 சதவீத கமிஷன் பெற்றனர். கோவிட் காலத்தில் 10 ரூபாய் பினாயிலை 40 ரூபாய்க்கு வாங்கி உள்ளனர். 100 ரூபாய் பினாயிலை 700 ரூபாய்க்கு வாங்கி உள்ளனர். அதில் வந்த பணத்தை வைத்து பேசுகின்றனர். இவர்கள் என்ன மக்கள் தலைவர்கள், என்ன சமுதாய தலைவர்கள். கோவையில் என்ன அடிப்படை மாற்றம் செய்துள்ளனர்.
10 வருடம் மந்திரியாக இருந்து கொள்ளையடித்து, ஊழல் பணத்தை ஒரு இடத்தில் பதுக்கி வைத்து, தேர்தல் நேரத்தில் அள்ளி வீசினால், அது வளர்ச்சியா அது வீக்கம். ஜனநாயகத்தை பற்றி பேசுவதற்கு ஸ்டாலினுக்கு உரிமை இல்லை எனத் தெரிவித்தார்.
மற்ற கட்சி வேட்பாளர்கள் என்னை என்ன வேண்டுமானலும் சொல்லலாம், கோவை வேட்பாளர்களுடன் சண்டை போட நான் வரவில்லை, என்னுடைய வேலை மக்களிடம் பிரச்னைகளை எடுத்துக் கூறி வாக்கு சேகரிப்பது எனத் தெரிவித்தார்.