என்னை தோற்கடிக்க திமுக, அதிமுக ஒன்று சேர்ந்து போராடும்! - அண்ணாமலை
Sep 13, 2026, 04:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

என்னை தோற்கடிக்க திமுக, அதிமுக ஒன்று சேர்ந்து போராடும்! – அண்ணாமலை

Murugesan M by Murugesan M
Mar 24, 2024, 07:06 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஜனநாயகத்தை பற்றி பேசுவதற்கு ஸ்டாலினுக்கு உரிமை இல்லை எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கோவை நாடாளுமன்ற தொகுதியில் பா.ஜ.க சார்பில் அக்கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். நேற்று முதல் அண்ணாமலை கோவை தொகுதியில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் இன்று கோவை சரவணம்பட்டியில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் மாநில பாஜகத் தலைவர் அண்ணாமலை பங்கேற்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை,

2019 ல் அளித்த 295 வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி உள்ளோம். திமுகவை போல் சொன்ன விஷயத்தை திரும்ப பா.ஜ., சொல்லாது. மோடி செய்தது, பாஜ செய்தது மக்களுக்கு தெரியும்.

கம்யூனிஸ்ட் எம்.பி., வளர்ச்சி வேண்டாம் என பிடிவாதமாக உள்ளார். மற்றொரு வேட்பாளரின், கமிஷன் வாங்குவதற்காக மட்டுமே பாலம் கட்டும் கட்சியைச் சேர்ந்தவர். ஊழல் செய்வதற்காக மட்டுமே ஆட்சியில் இருந்த கட்சி வளர்ச்சி பற்றி பேசுகிறது. கோவையில் கொள்ளையடிப்பதற்காக, கமிஷன் பெறுவதற்காக வளர்ச்சி என்ற வீக்கத்தை காட்டி கொண்டுள்ளனர்.

மத்திய அரசுக்கும், கோவை மக்கள் இடையே ‛ ஹாட்லைன் ‘ ஆக இருப்பேன். மக்களுக்கும் மத்திய அரசுக்கும் இடையே இணைப்பு பாலமாக இருந்து திட்டங்களை வேகமாக செயல்படுத்துவோம் எனத் தெரிவித்தார்.

“பணம் செலவிட மாட்டேன் என நான் பேசியதை இபிஎஸ் முழுமையாக கேட்கவில்லை. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கொள்ளையடித்தவர்கள் என்னை விமர்சிக்க கூடாது. டீ கூட அடுத்தவர் பணத்தில் குடிப்பவர் இபிஎஸ்.

10 ஆண்டுகள் அமைச்சராக இருந்து மக்கள் பணத்தை கொள்ளையடித்தால் வளர்ச்சியா?
குளமையான இருந்த கோவையில் 2 டிகிரி வெப்பம் உயர திராவிடக் கட்சிகளே காரணம்.
ஏப்ரல் 10-க்கு பிறகு திமுக அதிமுக பங்காளி கட்சிகள் ஒன்று சேர்வார்கள். தேர்தலின் போது என்னை தோற்கடிக்க இரு கட்சிகளும் ஒன்று சேர்ந்து போராடுவார்கள்.” என்று தெரிவித்தார்.

பா.ஜ., சார்பில் யாரும் ஒப்பந்ததாரர்கள் இல்லை.அதிமுக ஆட்சியில் சம்பாதித்த பணம் யார் கையில் இருக்கிறதோ அவர்கள் வேட்பாளர்களாக அதிமுக சார்பில் இறங்கி உள்ளனர்.
செங்கலை கையில் எடுத்து, செங்கலை பாருங்கள் என சொல்லும் அளவுக்கு தான் உதயநிதிக்கு அறிவு இருக்கிறது. அரசியலில் பக்குவப்படாதவர்கள், அறிவு இருக்கக்கூடியவர்கள் மக்களுக்கு சமுதாய பணி செய்பவர்கள் யாரும் வராமல், தாத்தா, அப்பா இன்ஷியல் மட்டும் வைத்து கொண்டு அரசியலுக்கு வந்தால், செங்கலை தூக்கி வந்து, செங்கலை காட்டும் புத்தி மட்டும் இருக்கும். 2026ம் ஆண்டின் முதல்பகுதியில் எய்ம்ஸ் வரும் என உறுதி அளித்துள்ளோம்.

கருணாநிதி குளித்தலை தேர்தலில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. 33 மாதமாக செய்த சாதனையை சொல்லவில்லை. எதிர்மறை அரசியல் செய்கின்றனர். மக்கள் இவர்களுக்கு பாடம் புகட்டுவார்கள்.

திமுக, மத்திய அரசு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் 30 சதவீத  கமிஷன் பெற்றனர். கோவிட் காலத்தில் 10 ரூபாய் பினாயிலை 40 ரூபாய்க்கு வாங்கி உள்ளனர். 100 ரூபாய் பினாயிலை 700 ரூபாய்க்கு வாங்கி உள்ளனர். அதில் வந்த பணத்தை வைத்து பேசுகின்றனர். இவர்கள் என்ன மக்கள் தலைவர்கள், என்ன சமுதாய தலைவர்கள். கோவையில் என்ன அடிப்படை மாற்றம் செய்துள்ளனர்.

10 வருடம் மந்திரியாக இருந்து கொள்ளையடித்து, ஊழல் பணத்தை ஒரு இடத்தில் பதுக்கி வைத்து, தேர்தல் நேரத்தில் அள்ளி வீசினால், அது வளர்ச்சியா அது வீக்கம். ஜனநாயகத்தை பற்றி பேசுவதற்கு ஸ்டாலினுக்கு உரிமை இல்லை எனத் தெரிவித்தார்.

மற்ற கட்சி வேட்பாளர்கள் என்னை என்ன வேண்டுமானலும் சொல்லலாம், கோவை வேட்பாளர்களுடன் சண்டை போட நான் வரவில்லை, என்னுடைய வேலை மக்களிடம் பிரச்னைகளை எடுத்துக் கூறி வாக்கு சேகரிப்பது  எனத் தெரிவித்தார்.

Tags: k annamalaidmk fails
Share
Tweet
SendShare
Previous Post

பிரேசிலை கடுமையாக தாக்கிய புயல்: 10 பேர் பலி!

Next Post

காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்படவில்லை :  பாஜக விளக்கம்!!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies