லடாக் யூனியன் பிரதேசம் லே முகாமில் ராணுவ வீரர்களுடன் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ஹோலி பண்டிகை கொண்டாடினார்.
கடல் மட்டத்தில் இருந்து 19,500 அடி உயரம் கொண்ட சியாச்சினில் படிப்படியான உயரங்களில் இந்திய ராணுவ முகாம்கள் உள்ளன. இவை, உலகின் மிக உயரமான மற்றும் மிகவும் கடினமான போர்களமாகக் கருதப்படுகிறது. சியாச்சின் பனிமலையில் மைனஸ் 45 டிகிரி வரை குளிர் நிலவுவது வழக்கம்.
இந்நிலையில், மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் ராணுவ வீரர்களுடன் ஹோலி பண்டிகை கொண்டாடுவதற்காக நேற்று லே செல்வதாக இருந்தது. ஆனால் மோசமான வானிலை காரணமாக அவரின் பயண திட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், லே ராணுவ முகாம் சென்ற ராஜ்நாத்சிங், கடும் குளிரிலும் தேசத்தை காத்து வரும் வீரர்களுடன் ஹோலி பண்டிகை கொண்டாடி உற்சாகப்படுத்தினார்.