லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு 194 ரன்கள் இலக்கு!
Oct 6, 2025, 05:04 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு 194 ரன்கள் இலக்கு!

Web Desk by Web Desk
Mar 24, 2024, 05:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2024 ஐபிஎல் தொடரின் இன்றையப் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு 194 ரன்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி !

இந்தியன் பிரீமியர் லீக்கின் 17-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கியது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்குபெற்றுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் டைட்டன்ஸ்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் கலந்துகொண்டுள்ளன.

இந்த தொடரின் மூன்றாம் நாளான இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகிறது. இதன் முதல் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது.

இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4 விக்கெட்கள் இழப்பிற்கு 193 ரன்களை எடுத்துள்ளது.

இதில் தொடக்க வீரராக களமிறங்கிய ஜோஸ் பட்லர் 2 பௌண்டரீஸ் அடித்து 11 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் விளையாடி வந்த யசஸ்வி ஜைஸ்வால் 3 பௌண்டரீஸ் மற்றும் 1 சிக்சர் என 5 வது ஓவர் முடிவில் 24 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

பின்னர் களமிறங்கிய சஞ்சு சாம்சன் மற்றும் பராக் கூட்டணி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்து வந்தது. சஞ்சு சாம்சன் 33 பந்துகளில் தனது அரைசதத்தை எடுத்தார்.

அதேபோல் சிறப்பாக விளையாடி வந்த பராக் அவரும் அரைசதம் எடுப்பார் என்று எதிர்பார்த்த நேரத்தில் 15வது ஓவரில் 1 பௌண்டரி மற்றும் 3 சிக்சர்கள் அடித்து மொத்தமாக 29 பந்துகளில் 43 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

பின்னர் களமிறங்கிய சிம்ரோன் ஹெட்மையர் 5 ரன்களில் ஆட்டமிழக்க அவரை தொடர்ந்து களமிறங்கினார் இளம் வீரர் துருவ் ஜூரல். சஞ்சு சாம்சன் மற்றும் துருவ் ஜூரல் கூட்டணியும் சிறப்பாக விளையாடி ரன்களை குவித்து வந்தனர்.

பின்னர் 20 ஓவர்கள் முடிவில் துருவ் ஜூரல் 1 பௌண்டரி மற்றும் 1 சிக்சர் என 12 பந்துகளில் 20* ரன்களை எடுத்தார். அதேபோல் சஞ்சு சாம்சன் 3 பௌண்டரீஸ் மற்றும் 6 சிக்சர்கள் என மொத்தமாக 52 பந்துகளில் 82* ரன்களை எடுத்தார்.

இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்கள் இழப்பிற்கு 193 ரன்களை எடுத்துள்ளது. லக்னோ அணியில் அதிகபட்சமாக நவீன் 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

அதேபோல் ரவி பிஷ்னோய் மற்றும் மொஹ்சின் கான் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினார். இதனால் தற்போது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு 194 என்ற பெரிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Tags: t20ipl 2024194 runs target for Lucknow Supergiants!
ShareTweetSendShare
Previous Post

தோனிக்கு எப்படி கேப்டன் பதவி வந்தது ? ரகசியத்தை உடைத்த சச்சின்!

Next Post

வலங்கைமான் சீதளாதேவி அம்மன் கோவில் திருவிழா கோலாகலம்!

Related News

அமைச்சர் துரைமுருகன் மீதான சொத்து குவிப்பு வழக்கு : தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

உப்பு ஏரியை உரிமம் கொண்டாடும் இந்தியா – பாகிஸ்தான் : மீண்டும் பூதாகரமாக உருவெடுத்த சர் கிரீக் பிரச்னை!

காசா கட்டுப்பாட்டை விட்டுக்கொடுக்க மறுத்தால் ஹமாஸ் அழிக்கப்படும் – அதிபர் டிரம்ப் கடும் எச்சரிக்கை!

திமுக அரசை கண்டித்து சிறை நிரப்பும் போராட்டம் – தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் அறிவிப்பு!

பாரா ஒலிம்பிக் “ஹீரோ” ஹெயின்ரிச் பாபோவ் – இரும்புமனிதன் தங்கமகனாக மாறிய கதை!

ஆளுநரை சீண்டும் வகையில் முதலமைச்சர் செயல்படுவது நல்லதல்ல – அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்க அரசு முடக்கம் : இழுத்து மூடப்பட்ட NASA – நாசாவிலும் ஆட்குறைப்பு நடவடிக்கைகள்!

பயங்கரவாதத்திற்கு கனடாவில் இருந்து நிதியுதவி – பின்னணியில் பாக். உளவு அமைப்பு!

பாகிஸ்தானுக்கு BYE : வெளியேறும் பன்னாட்டு நிறுவனங்கள் – அமெரிக்காவிடம் அடகு போகும் பாகிஸ்தான்!

காசாவில் போர் நிறுத்தம் : வெற்றி பெற்ற ட்ரம்ப் அமைதி திட்டம் – பிரதமர் மோடி பாராட்டு!

அமெரிக்காவில் இந்திய வம்சாவளி சுட்டுக் கொலை!

பனிப்புயலால் எவரெஸ்ட் சிகரத்தில் சிக்கி தவிக்கும் வீரர்கள்!

திண்டுக்கல் ‘காந்தாரா’ வேடத்தில் திரையரங்கில் நடனமாடிய ரசிகர்!

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி : பாகிஸ்தானை எளிதில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி!

டெல்லி : கர்பா நடனமாடிய முதலமைச்சர் ரேகா குப்தா!

ரஜினிகாந்த் இமயமலை பயணம் – புகைப்படங்கள் வைரல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies