தோனிக்கு எப்படி கேப்டன் பதவி வந்தது ? ரகசியத்தை உடைத்த சச்சின்!
Sep 12, 2026, 09:03 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தோனிக்கு எப்படி கேப்டன் பதவி வந்தது ? ரகசியத்தை உடைத்த சச்சின்!

Murugesan M by Murugesan M
Mar 24, 2024, 05:10 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்தியன் பிரீமியர் லீக்கின் 17-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கியது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்குபெற்றுள்ளது.

இதன் தொடர் டதொடங்குவதற்கு முதல் நாள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்த மகேந்திர சிங் தோனி அவரின் கேப்டன் பதவியை வளர்ந்து வரும் வீரரான ருத்ரஜிக்கு கொடுத்தார்.

கடந்த 2008 முதல் சிஎஸ்கே அணியை தலைமை தாங்கி வந்த அவர் 2 சாம்பியன்ஸ் லீக் கோப்பைகளையும், 5 ஐபிஎல் கோப்பைகளையும் வென்று காலத்தால் அழிக்க முடியாத வெற்றிகரமான கேப்டனாக சாதனை படைத்துள்ளார்

அதற்கு முன்பாகவே 2007ஆம் ஆண்டு அனுபவமற்ற கேப்டன்ஷிப் பொறுப்பில் தைரியமாக செயல்பட்ட அவர் தென்னாபிரிக்காவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையை இந்தியா வெல்வதற்கு முக்கிய பங்காற்றினார்.

அப்படியே 2010ஆம் ஆண்டு தோனி தலைமையில் உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் அணியாக முதல் முறையாக முன்னேறி சாதனை படைத்த இந்தியா சொந்த மண்ணில் நடந்த 2011 உலகக் கோப்பையை 28 வருடங்கள் கழித்து வென்று சரித்திரம் படைத்தது.

அதன் பின் 2013 சாம்பியன்ஸ் ட்ராபியையும் வென்ற தோனி உலகிலேயே 3 விதமான ஐசிசி வெள்ளைப்பந்து உலகக் கோப்பைகளை வென்ற ஒரே கேப்டனாக சாதனை படைத்தார்.

இருப்பினும் வருங்காலத்தை கருத்தில் கொண்டு 2014-ல் டெஸ்ட் கேப்டன்ஷிப் பதவியை விட்ட அவர் 2017-ல் மொத்தமாக இந்திய அணியின் கேப்டன்ஷிப் பொறுப்பை விட்டு வெளியேறினார். அதேபோல் தற்போது சிஎஸ்கே கேப்டன் பதவியையும் ருதுராஜ் கையில் ஒப்படைத்துள்ளார்.

இந்நிலையில் 2007ஆம் ஆண்டு இந்தியாவின் கேப்டனாக பொறுப்பேற்குமாறு அப்போதைய பிசிசிஐ தலைவர் சரத் பவர் தன்னை கேட்டுக் கொண்டதாக சச்சின் கூறியுள்ளார். ஆனால் அதற்கு தோனி தான் சரியானவர் என்று சச்சின் டெண்டுல்கர் பரிந்துரை செய்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “உண்மையில் 2007ஆம் ஆண்டு பிசிசிஐ தலைவர் சரத் பவர் இந்தியாவை என்னை தலைமை தாங்குமாறு கேட்டுக் கொண்டார். ஆனால் அப்போது என்னுடைய உடல் மோசமான நிலையில் இருந்தது.

குறிப்பாக கேப்டனாக கணுக்காலில் காயமும் தோள்பட்டையில் சிகிச்சையும் எடுத்துக் கொண்டிருந்த நான் நம்முடைய அணியை வழி நடத்துவது சரியல்ல என்று நினைத்தேன். அந்த சமயத்தில் தோனியை பற்றிய என்னுடைய அப்சர்வேஷன் நன்றாக இருந்தது.

ஏனெனில் நான் ஸ்லீப் பகுதியில் பீல்டிங் செய்தேன். அப்போது பலமுறை அவருடன் விளையாட்டை பற்றி உரையாடினேன். அந்த நேரங்களில் நான் அவரிடம் “இது போன்ற தருணத்தில் நீங்கள் என்ன செய்திருப்பீர்கள்” என்று கேட்பேன்.

அவருடைய பதில்கள் சமநிலையில் இருந்தது. அவர் மிகவும் உள்ளுணர்வு கொண்டவராகவும் அழுத்தமான தருணங்களில் விழிப்புணர்வு கொண்டவராகவும் இருந்தார்” என்று கூறினார்.

Tags: How did Dhoni get the captaincy? Sachin broke the secret!
Share
Tweet
SendShare
Previous Post

பங்குனி உத்திர திருவிழா: பம்பையில் ஐயப்பனுக்கு ஆராட்டு!

Next Post

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு 194 ரன்கள் இலக்கு!

Related News

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies