மறுமலர்ச்சி திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவர் அ. கணேசமூர்த்தி. இவர் அக்கட்சியில் முக்கியப் பதவி வகிக்கிறார்.
1978-ல் திமுக மாணவரணி பொறுப்பில் இருந்த இவர் பின்னர் ஒருங்கிணைந்த பெரியார் மாவட்ட திமுக செயலாளராகப் பொறுப்பு வகித்தார்.
1993-ல் திமுகவிலிருந்து வைகோ வெளியேற்றப்பட்டபோது அவருக்கு ஆதரவு தெரிவித்து வெளியேறிய 9 மாவட்ட செயலாளர்களில் கணேசமூர்த்தியும் ஒருவர்.
மறுமலர்ச்சி திமுக தொடங்கியதிலிருந்து ஈரோடு மாவட்டச் செயலாளராகப் பொறுப்பு வகித்த இவர் 2016 முதல் மறுமலர்ச்சி திமுக பொருளாளராகவும் இருந்தார்.
கடந்த 1998 -ம் ஆண்டு பொதுத் தேர்தலில் பழனி தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.
பின்னர் 2009 மற்றும் 2019 -ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், ஈரோடு தொகுதியிலிருந்து ம.தி.மு.க சார்பில் போட்டியிட்டு, வெற்றி பெற்றார். கடந்த 2009 பொதுத் தேர்தலில் மதிமுக சார்பாக வென்ற ஒரே வேட்பாளரும் இவரே.
இந்த நிலையில், மதிமுக ஈரோடு எம்.பி. கணேசன மூர்த்தித் தற்கொலை முயற்சி செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஒரு வாரமாக அவர் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.