அமெரிக்காவில் சாலை விபத்தில் உயிரிழந்த, இந்தியாவைச் சேர்ந்த அர்ஷியா ஜோஷியின் உடலை தாயகம் கொண்டு வருவதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வோம் என்று இந்திய துணைத் தூதரகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் கடந்த 21-ஆம் தேதி நிகழ்ந்த கார் விபத்தில், இந்தியாவைச் சேர்ந்த 21 வயதான அர்ஷியா ஜோஷி என்ற பெண் பரிதாபமாக உயிரிழந்தார். அவருடைய உடலை இந்தியாவிற்கு எடுத்து செல்ல அனைத்து உதவிகளையும் செய்வோம் என்று நியூயார்க்கில் உள்ள இந்திய துணை தூதரகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய துணை தூதரகம் தனது எக்ஸ் பதிவில், பென்சில்வேனியாவில் கடந்த மார்ச் 21-ஆம் தேதி நிகழ்ந்த கார் விபத்தில் உயிரிழந்த அர்ஷியா ஜோஷியின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.
அவருடைய குடும்பம் மற்றும் அமெரிக்காவில் உள்ள இந்திய சமூகத்தினருடன் தூதரகம் தொடர்பில் உள்ளது. விபத்தில் உயிரிழந்தவரின் உடலை விரைவில் இந்தியாவுக்கு எடுத்துச் செல்வதற்கான அனைத்து உதவிகளையும் செய்வோம் என அதில் கூறப்பட்டுள்ளது.
Our deepest condolences to the family of Ms Arshia Joshi, a young professional, who lost her life in a tragic car accident in Pennsylvania on March 21. May her soul rest in eternal peace. @IndiainNewYork is in touch with Ms Joshi’s family and local community leaders. Extending…
— India in New York (@IndiainNewYork) March 24, 2024