நீலகிரி பாராளுமன்றத் தொகுதியில் அமைந்துள்ள, அவினாசி பகுதியைச் சேர்ந்த கணியம்பூண்டி கிராமத்து மக்களிடம், பாஜக நீலகிரி வேட்பாளரும், மத்திய இணை அமைச்சருமான எல்.முருகன் வாக்கு சேகரித்தார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில்,
நீலகிரி பாராளுமன்றத் தொகுதியில் அமைந்துள்ள, அவினாசி பகுதியைச் சேர்ந்த கணியம்பூண்டி கிராமத்து மக்களைச் சந்தித்து, அவர்களுடன் உரையாடினேன். மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு.@narendramodi ஜி அவர்களின் பத்தாண்டு கால நல்லாட்சியின் சாதனைகளை, அப்பகுதி மக்களிடத்தில் எடுத்துரைத்த போது, மனதார… pic.twitter.com/egdQmoXXlX
— Dr.L.Murugan (மோடியின் குடும்பம்) (@Murugan_MoS) March 24, 2024
நீலகிரி பாராளுமன்றத் தொகுதியில் அமைந்துள்ள, அவினாசி பகுதியைச் சேர்ந்த கணியம்பூண்டி கிராமத்து மக்களைச் சந்தித்து, அவர்களுடன் உரையாடினேன். மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. மோடி ஜி அவர்களின் பத்தாண்டு கால நல்லாட்சியின் சாதனைகளை, அப்பகுதி மக்களிடத்தில் எடுத்துரைத்த போது, மனதார மகிழ்வை வெளிப்படுத்தினார்கள்.
ஊழல், குடும்ப ஆட்சி மற்றும் ‘போலி திராவிட மாடல்’ அரசின் ஒவ்வொரு துறையிலும் புரையோடிப் போயுள்ள லஞ்ச லாவண்யத்திற்கு எதிரான மனநிலையில் நம் மக்கள் இருப்பது தெளிவாகிறது.
2ஜி ஊழல் மூலம், உலகளவில் நமது தேசத்திற்கு தலைகுனிவு ஏற்படுத்தியவர்களை, நிரந்தரமாக புறக்கணிக்க நீலகிரி மக்கள் முடிவெடுத்துள்ளார்கள்.
மீண்டும் மோடி-வேண்டும் மோடி என்பதே, நமது தொகுதியின் ஒருமித்த குரலாக ஓங்கி ஒலிக்கட்டும்..!
தாமரையின் மலர்ச்சியே, நீலகிரியின் வளர்ச்சி..! என குறிப்பிட்டுள்ளார்.