10-ம் வகுப்பு தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவிகளுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமது எக்ஸ் தளத்தில்,
நாளை பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்! அன்புள்ள மாணவர்களே, தேர்வுகளை தன்னம்பிக்கையுடன் அணுகுமாறு கேட்டுக்கொள்கிறேன். தேர்வு மையங்களுக்கு முன்னதாகவே அடைந்து, வினா தாள்களை கவனமாகப் படித்துவிட்டு, எளிதான கேள்விகளுக்கு பதிலளிப்பதை முதலில் தொடங்குங்கள். உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள். சில கேள்விகள் சவாலாகத் தோன்றினால் பீதி அடைய வேண்டாம்; பதில்கள் பெரும்பாலும் மனம் அமைதி அடையும் போது ஞாபகத்துக்கு கவரும்.
"நாளை பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்! அன்புள்ள மாணவர்களே, தேர்வுகளை தன்னம்பிக்கையுடன் அணுகுமாறு கேட்டுக்கொள்கிறேன். தேர்வு மையங்களுக்கு முன்னதாகவே அடைந்து, வினா தாள்களை கவனமாகப் படித்துவிட்டு, எளிதான கேள்விகளுக்கு…
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) March 25, 2024
அன்பான பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களே, இந்த நேரத்தில் உங்கள் விலைமதிப்பற்ற உணர்ச்சிபூர்வமான ஆதரவு மற்றும் வழிகாட்டுதல் நமது மாணவர்களுக்கு மிகவும் முக்கியமானவை என குறிப்பிட்டுள்ளார்.