இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோகித் சர்மா தன்னுடைய சக மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்களுடன் சேர்ந்து ஹோலி பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடிவுள்ளார்.
இந்தியன் பிரீமியர் லீக்கின் 17-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கியது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்குபெற்றுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் டைட்டன்ஸ்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் பங்கேற்றுள்ளன.
நேற்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடியது. அந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் நாடு முழுவதும் இன்று ஹோலி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோகித் சர்மா தன்னுடைய சக மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்களுடன் சேர்ந்து ஹோலி பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடிவுள்ளார்.
Happy Holi, everyone! 😍🎨
Brb, admin needs to get the phone repaired 🥲#MumbaiMeriJaan #MumbaiIndians | @ImRo45 pic.twitter.com/4I0aIqnvru
— Mumbai Indians (@mipaltan) March 25, 2024
ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தை முடித்துவிட்டு வீரர்கள் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் ரோகித் சர்மா.
இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனைப் பார்த்த ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.