பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்குப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடங்கியது. இன்று முதல் ஏப்ரல் 8ம் தேதி வரை தேர்வு நடைபெறும். இதற்காக மாநிலம் முழுவதும் 4,107 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள், தனித்தேர்வர்கள், சிறை கைதிகள் உட்பட 9.38 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர். முதல் நாளில் தமிழ் உள்ளிட்ட மொழிப்பாடங்களுக்கான தேர்வு நடைபெறுகிறது.
இந்நிலையில் மாணவர்களுக்கு அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு எழுதும் மாணவச் செல்வங்கள் அனைவருக்கும், மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். பள்ளிக்கல்வியின் அடுத்த கட்டத்திற்குச் செல்வதற்கான நுழைவாயிலே இந்த பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு. பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கொண்டு வந்துள்ள கல்வித் துறை மறுமலர்ச்சித் திட்டங்கள், மதிப்பெண் வேறுபாடின்றி, அனைத்து மாணவர்களுக்குமான திறமைகளை அடையாளம் கண்டு, அனைவருக்கும் நல்வாய்ப்புகளை வழங்கும்படி அமைந்துள்ளது.
நாளைய தினம், பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு எழுதவிருக்கும் மாணவச் செல்வங்கள் அனைவருக்கும், மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பள்ளிக்கல்வியின் அடுத்த கட்டத்திற்குச் செல்வதற்கான நுழைவாயிலே இந்த பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு. மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு…
— K.Annamalai (மோடியின் குடும்பம்) (@annamalai_k) March 25, 2024
எனவே, மாணவச் செல்வங்கள், பயமின்றித் தேர்வுகளை எழுதி, மேல்நிலைக் கல்வியில் தங்கள் திறமைக்கேற்ற பாடப்பிரிவினைத் தேர்ந்தெடுக்கும் வண்ணம், இந்தப் பொதுத் தேர்வுகளில் சிறப்பாகத் தேர்ச்சி பெற வேண்டும் என்று இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.