பிரதமர் மோடியை பற்றி பேச முதல்வர் ஸ்டாலினுக்கு தகுதி இல்லை! - அண்ணாமலை
Oct 27, 2025, 10:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமர் மோடியை பற்றி பேச முதல்வர் ஸ்டாலினுக்கு தகுதி இல்லை! – அண்ணாமலை

Web Desk by Web Desk
Mar 26, 2024, 12:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

“இந்தியா முழுவதும் 51 சதவீதம் வாக்குகளையும், கோவை நாடாளுமன்ற தொகுதியில் 60 வதவீத வாக்குகளையும் பெறுவோம்” என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூர் தெற்கு சட்டமன்றத் தொகுதி செயல் வீரர்கள் கூட்டம் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வரும் நாடாளுமன்றத் தேர்தலில்,  பாரதப் பிரதமர் நரேந்திர மோடி நேர்மையான, ஊழலற்ற நல்லாட்சி தொடர, தமிழகமும் முக்கியப் பங்கு வகிப்பதற்காக மேற்கொள்ள வேண்டிய, பணிகளைக் குறித்து உரையாடப்பட்டது.

இதில் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், கோவை மாநகர் மாவட்டத் தலைவர் ரமேஷ்குமார் மற்றும் நாடாளுமன்றத் தொகுதி பொறுப்பாளர்கள், மண்டலத் தலைவர்கள், கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை,

“கோவை மக்களவைத் தொகுதி முழுவதும் மிகப்பெரிய எழுச்சியை பார்க்க முடிகிறது. ஒதுங்கி இருந்தவர்கள் கூட அரசியல் மாற்றம் வேண்டும் என வருகின்றனர். வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கையின் போது, கோயம்புத்தூர் ஒரு புரட்சி செய்யும் என்பதில் உறுதியாக இருக்கின்றோம்.

தமிழகம் முழுவதும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்து இருக்கின்றனர். 39 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என்பதை களத்தில் இருந்து தெரிந்து கொள்ள முடிகின்றது.

அரசியலில் திமுக இருப்பதே அவமானம். விஞ்ஞான ஊழல், குடும்ப ஆட்சி, வாக்குக்கு பணம் கொடுப்பது ஆகியவை திமுக வந்த பிறகுதான் உருவானது. இதனால்தான் தந்தை பெரியார் திமுகவை கடுமையாக எதிர்த்தார்.

இன்று தனக்கென்று எதுவும் இல்லாமல் ஒரு பொம்மை முதலமைச்சராக இருக்கிறார் ஸ்டாலின். இவர் பிரதமர் மோடியை பற்றி பேச தகுதி இல்லை. தமிழக அரசின் கடன் 8 லட்சத்து 23 ஆயிரம் கோடியை தாண்டி இருக்கின்றது. இந்திய அரசியலில் இது போன்ற ஆட்சி நடந்ததில்லை.

எனக்கு அடையாளம் கொடுத்தது கோவை. அந்த கோவைக்கு நல்லது செய்வதற்கு வருகின்றேன். நாங்கள் வந்தால் வளர்ச்சியை கொண்டு வருவோம், மெட்ரோ ரயில் கொண்டு வருவோம்.

ஸ்மார்ட் சிட்டியில் அதிமுக கொள்ளையடித்த லிஸ்ட்டை வெளியே விடலாமா? 40 சதவீதம் கமிஷன் வாங்கியதை பேசலாமா? 33 மாதமாக தமிழகத்தில் லஞ்ச உழலை பற்றி அதிகம் பேசிய ஒரு தலைவரை காட்டுங்கள் பார்க்கலாம். பாஜக எங்கிருக்கிறது என்று கேட்டவர் கருணாநிதி. இன்று பாஜகவை திமுக திட்டாத நாளில்லை.

ஸ்மார்ட் சிட்டி, நொய்யல் என அனைத்து நலத்திட்டத்திற்கு கொடுத்தவற்றையும் கொள்ளையடித்து இருக்கின்றனர். அண்ணாமலை கோவையில் என்ன செய்கின்றார் என்பதுதான் அனைவரின் பேச்சாகவும் இருக்கின்றது. என்னுடைய வளர்ச்சிக்கு காரணமே என்னுடைய பேச்சுதான். ஸ்டாலின் என் மீதும், இபிஎஸ் மீதும் வழக்குகள் போட்டிருக்கின்றார். இது எங்களுடைய தைரியமான செயல்பாட்டை காட்டுகிறது.

சௌமியா அன்புமணி வாரிசு அரசியலில் வரமாட்டார். அவருக்கு தகுதி இருப்பதாக பார்க்கிறேன். பசுமை இயக்கத்திற்கு வேலை செய்து இருக்கிறார்கள். அவர்களை வாரிசு அரசியலுடன் ஒப்பிடுவது சரியாக இருக்காது.

இந்தியா முழுவதும் 51 சதவீத வாக்குகளை பா.ஜ.க பெறும். கோவை பாராளுமன்றத் தொகுதியில் 60 சதவீத வாக்குகள் பா.ஜ.கவிற்கு கிடைக்கும். களத்தில் அதற்காக நண்பர்கள் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். கோவை அரசியல் களம் சிறப்பாக இருக்கிறது. வேட்புமனு தாக்கலுக்கு பின்பு மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய இருக்கின்றேன் எனத் தெரிவித்தார்.

Tags: bjp k annamalaidmk fails
ShareTweetSendShare
Previous Post

ஈரோடு பண்ணாரி மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா!

Next Post

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுப்ரியாவுக்கு கங்கனா ரனாவத் பதிலடி!

Related News

மழையில் ரோடு போடும் திமுக அரசு!

வங்கக்கடலில் உருவானது ‘மோந்தா’ புயல்!

பாரத மாதா உங்களை தேடுகிறாள்! வரவேற்கிறாள்! – வெளிநாடுவாழ் இந்தியர்கள் தாயகம் திரும்ப ஸ்ரீதர் வேம்பு அழைப்பு!

நெற்பயிர்கள் மழையில் நனைந்து முளைக்கத் தொடங்கியதற்கு முழுக்க முழுக்க தமிழக அரசே காரணம் – நயினார் நாகேந்திரன்

வந்தே மாதரம் தேசிய பாடல் இயற்றப்பட்டதன் 150வது ஆண்டு விழாவை நாட்டு மக்கள் வெகுசிறப்பாகக் கொண்டாட வேண்டும் – பிரதமர் மோடி

இன்று மாலை தேர்தல் ஆணையம் செய்தியாளர் சந்திப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

வியன்னா ஓபன் டென்னிஸ் தொடர் – ஜானிக் சின்னர் சாம்பியன் பட்டம்!

விவசாயிகள் அறுவடை செய்த நெல்லின் ஈரப்பதம் 20% வரை உள்ளது : மத்திய குழு

பெஷாவரை நெருங்கும் TTP – தாலிபான்களால் கடும் நெருக்கடியில் பாகிஸ்தான்!

நெருக்கடியின் விளிம்பில் வங்கதேசம் : புதிய இஸ்லாமிய ராணுவம் – தெற்காசிய நாடுகளுக்கு ஆபத்து?

டெல்லியில் மாசு : மேக விதைப்பு பலன் தருமா? – செயற்கை மழை எப்படி சாத்தியம்!

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவை வெல்லவே முடியாது  : சீண்டுவது பாக்.,கிற்கே ஆபத்து – CIA முன்னாள் அதிகாரி எச்சரிக்கை!

மீண்டும் சாம்பல் பட்டியலில் : பாக்.,தனிமைப்படுத்தப்படும் – FATF அமைப்பு எச்சரிக்கை!

எல்.ஐ.சி மீதான நம்பிக்கையை குலைக்க சதியா? – Deep State-ன் ஊதுகுழலா காங்கிரஸ்?

குடியேறிகளில் இந்தியர்கள் சிறப்பானவர்கள் – அமெரிக்க பொருளாதார நிபுணர் பாராட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies