பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷு இன்று காலை காலமானார். அவருக்கு வயது 60.
பிரபல தனியார் தொலைக்காட்சியில் வெளியான நிகழ்ச்சி லொள்ளு சபா. இந்த நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் அன்பை பெற்றவர் சேஷு. இதனால் இவரை லொள்ளு சபா சேஷு என ரசிகர்கள் அழைக்கின்றனர்.
இவர், பல்வேறு திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார்.
இதனிடையே, கடந்த 15-ம் தேதி மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு அவசர பிரிவில் வைத்து சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அவர் காலமானார்.
சேஷு காலமானதை அடைந்த தொலைக்காட்சி பிரபலங்களும், திரையுலக பிரபலங்களும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.