2024-ஆம் ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை தொடங்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
தெற்கு காஷ்மீரின் இமயமலைப் பகுதியில் சுமார் 3 ஆயிரத்து 880 மீட்டர் உயரத்தில் அமர்நாத் குகை கோவில் அமைந்துள்ளது. இங்கு பனி உறைந்து சிவலிங்கம் வடிவில் காட்சி தருகிறது.
இந்தியாவின் புகழ்பெற்ற சிவாலயங்களில் ஒன்றான அமர்நாத் குகைக் கோவிலில், பனிலிங்கத்தை தரிசனம் செய்ய ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் யாத்திரை செல்வது வழக்கம்.
தன் வாழ்நாளில் ஒருமுறையாவது பனிலிங்கத்தை தரிசிக்க வேண்டும் என்று இந்துக்கள் நினைப்பதுண்டு. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தில் அமர்நாத் யாத்திரை தொடங்கும்.
அமர்நாத் யாத்திரை தொடங்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் நிர்வாகம் செய்து வருகிறது.
ஜம்முவின் பல்வேறு பகுதிகளில் உள்ள சுகாதார மையங்களில் இருந்து கட்டாய சுகாதாரச் சான்றிதழ்களை வழங்க மொத்தம் 112 மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். விண்ணப்பதாரர்களின் பதிவு விரைவில் தொடங்க உள்ளது.
இந்த ஆண்டு அமர்நாத் யாத்திரைக்கான அதிகாரப்பூர்வ தேதி இன்னும் குறிப்பிடப்படவில்லை. ஆனால், யாத்திரை ஜூன் 29-ஆம் தேதி தொடங்கலாம் என சமீபத்தில் நடந்த கோவில் நிர்வாகிகள் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.