சென்னையில் வேட்பு மனு தாக்கல் செய்யச் சென்ற நாம் தமிழர் கட்சியின் பெண் வேட்பாளர் தமிழ்செல்வி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தென் சென்னை வேட்பாளராக, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரால் அறிவிக்கப்பட்டவர் தமிழ் செல்வி.
பெண் வேட்பாளரான தமிழ்செல்வி, தனது வேட்புமனு, தேர்தல் அதிகாரியிடம் தாக்கல் செய்ய, தனது கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் படை சூழ ஆடி காரில் வருகை வந்தார்.
முன்னதாக, அவரது ஆடி கார் சென்னையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி சிக்னலில் நிற்காமல் அதிகவேகமாகச் சென்றுள்ளது. இது காவல்துறையின சிசிடிவி கேமராவில் சிக்கியுள்ளது.
இந்த கார் குறித்து போலீசார் விசாரணை நடத்திய போது, அந்த காருக்கான இன்சுரன்ஸ் கடந்த ஆண்டே காலாவதியானது தெரிய வந்தது.
இதனையடுத்து, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தமிழ் செல்விக்கு சென்னை போலீசார் அபாரதம் விதித்தனர்.