கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே மிகவும் பிரசித்தி பெற்ற பௌர்ணமி காவு பாலா திரிபுரசுந்தரி தேவி கோவிலில், பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த 216 பேருக்கு திருமணம் நடைபெற்றது.
திருவனந்தபுரம் மாவட்டம் வெங்கனூரில் மிகவும் பிரசித்தி பெற்ற பௌர்ண மிகாவு பாலா திரிபுரசுந்தரி தேவி கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் வளாகத்தில் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த 216 பேருக்கு நேற்று திருமணம் செய்து வைக்கப்பட்டது.
இதில், அட்டபாடி பகுதியைச் சேர்ந்த 72 பேரும், இடுக்கியில் உள்ள கோவில்மாலா பழங்குடியின கிராமத்தைச் சேர்ந்த 52 பேரும், மகாராஷ்டிராவில் உள்ள 8 பழங்குடியினர் என மொத்தம் 216 பேர் கலந்து கொண்டனர்.
மணமகனும், மணமகளும் ஒரே நிறத்தில் ஆடை அணிந்து கோவிலுக்கு வந்தனர். அவர்கள் வழிபாடு செய்த பிறகு திருமணம் நடந்தது. இந்த திருமண நிகழ்வு ஆசிய சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது.
ஒரு தனியார் நிறுவனத்தின் பங்களிப்புடன் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டன. திருமணத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் அறுசுவை உணவு பரிமாறப்பட்டது.