உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோவிலில், ஹோலி பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
கடந்த 25-ஆம் தேதி நாடு முழுவதும் முழு உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது. தென்னிந்தியாவை விட வட இந்தியாவில் ஹோலி பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
கடந்த ஜனவரி மாதம் பிராண பிரதிஷ்டை செய்யப்பட்ட அயோத்தி ராமர் கோவிலில், முதல் ஹோலி பண்டிகை மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
ஹோலி பண்டிகையை முன்னிட்டு, நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் அயோத்தி ராமர் கோவிலுக்கு வந்தனர். அங்கு குழந்தை ராமருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, குழந்தை ராமரின் திருமேனி மீது வண்ண மலர்கள் தூவப்பட்டன.
இதனை அடுத்து பக்தர்கள் ஒருவருக்கு ஒருவர் வண்ண பொடிகளை பூசி ஹோலி பண்டிகையைக் கொண்டாடினர். அப்போது, பக்தர்கள் ஜெய் ஸ்ரீராம், ஜெய் ஸ்ரீராம் என்று உற்சாகத்துடன் கோஷம் எழுப்பினர்.
ஹோலி தினத்தன்று குழந்தை ராமரை தரிசனம் செய்தது மகிழ்ச்சியாக இருந்ததாக பக்தர்கள் தெரிவித்தனர்.