இந்திய வீரரான ரோகன் போபண்ணா ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ எப்டனுடன் இணை 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா வீரரான ஜான் பேட்ரிக் ஸ்மித் இணையை வீழ்த்தி வெற்றி அரையிறுதிக்கு முன்னேறியது.
அமெரிக்காவின் புளோரிடா நகரில் மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் ஆடவர் இரட்டையர் பிரிவு காலிறுதி சுற்று இன்று நடைபெற்றது.
இதில் இந்திய வீரரான ரோகன் போபண்ணா ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ எப்டனுடன் இணைந்து பங்குபெற்றுள்ளார்.
இவர்கள் இன்று நடைபெற்ற காலிறுதி போட்டியில் நெதர்லாந்து வீரரான செம் வெர்பீக் – ஆஸ்திரேலியா வீரரான ஜான் பேட்ரிக் ஸ்மித் இணையுடன் விளையாடினர்.
இந்த போட்டியின் முதல் சுற்றில் ரோகன் போபண்ணா ஜோடி ஆஸ்திரேலியா வீரரான ஜான் பேட்ரிக் ஜோடியிடம் 3-6 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தது.
பின்னர் இரண்டாவது சுற்று நடைபெற்றது. இதில் ரோகன் போபண்ணா ஜோடி, ஆஸ்திரேலியா வீரரான ஜான் பேட்ரிக் ஜோடியை 7-6 என்ற செட் கணக்கில் வீழ்த்தியது.
இதைத் தொடர்ந்து வெற்றியாளரை தீர்மானிக்கும் மூன்றாவது சுற்று நடைபெற்றது. அதில் ரோகன் போபண்ணா ஜோடி, 10-7 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா வீரரான ஜான் பேட்ரிக் ஜோடியை வீழ்த்தியது.
இதன் மூலம் இந்திய வீரரான ரோகன் போபண்ணா ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ எப்டனுடன் இணை 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா வீரரான ஜான் பேட்ரிக் ஸ்மித் இணையை வீழ்த்தி வெற்றி அரையிறுதிக்கு முன்னேறியது.
உலக தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள போபண்ணாவுக்கு இன்றையப் போட்டியில் கிடைத்த வெற்றியானது, ஏ.டி.பி. இரட்டையர் தரவரிசையில் டாப்-10-யில் தொடர்ந்து நீடிக்கவும், ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் நடைபெறவுள்ள பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு நேரடியாக தகுதி பெறவும் உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.