மகாராஷ்டிரா மாநிலம் அகோலா மேற்கு தொகுதி இடைத்தேர்தல் நிறுத்தி வைக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்குகிறது. ஜுன் முதல் தேதி வரை தேர்தல் நடைபெறுகிறது. இதனிடையே தமிழகம் உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில் இடைத்தேர்தலும் நடைபெறுகிறது.
இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் அகோலா மேற்கு தொகுதி இடைத்தேர்தல் நிறுத்தி வைக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அங்கு ஏப்ரல் 26ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் அமர்வு வழிகாட்டுதலின்படி, இடைத்தேர்தல் தற்காலிமாக நிறுத்தி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.