2024 ஐபிஎல் : ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி!
Mar 15, 2026, 09:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

2024 ஐபிஎல் : ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி!

Murugesan M by Murugesan M
Mar 29, 2024, 10:27 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2024 ஐபிஎல் தொடரின் நேற்றையப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இந்தியன் பிரீமியர் லீக்கின் 17-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கியது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்குபெற்றுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் டைட்டன்ஸ்,கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் கலந்துகொண்டுள்ளன.

இந்தத் தொடரின் 9 வது போட்டி நேற்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டெல்லி கேபிட்டல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடியது.

இதில் டாஸ் வென்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 185 ரன்களை எடுத்தது.

இதில் அதிகபட்சமாக ரியான் பராக் 7 பௌண்டரீஸ் மற்றும் 6 சிக்சர்கள் என மொத்தமாக 45 பந்துகளில் 84 ரன்களை அடித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

அதேபோல் ரவிச்சந்திர அஸ்வின் 3 சிக்சர்கள் என மொத்தமாக 19 பந்துகளில் 29 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். அதேபோல் துருவ் ஜூரல் 3 பௌண்டரீஸ் என மொத்தமாக 12 பந்துகளில் 20 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் 15 ரன்களிலும், ஜோஸ் பட்டலர் 11 ரன்களிலும் ஆட்டமிழக்க ஹெட்மியர் 14 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதனால் ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 185 ரன்களை எடுத்தது. இதை தொடர்ந்து 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி கேபிட்டல்ஸ் அணி களமிறங்கியது.

டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய டேவிட் வார்னர் மற்றும் மிட்செல் மார்ஷ் கூட்டணி சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தனர்.

இதில் டேவிட் வார்னர் 5 பௌண்டரீஸ் மற்றும் 3 சிக்சர்கள் என மொத்தமாக 49 ரன்களை எடுத்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.

மற்றொரு தொடக்க வீரரான மிட்செல் மார்ஷ் 23 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய ரிஷப் பந்த் 2 பௌண்டரீஸ் மற்றும் 1 சிக்சர் என மொத்தமாக 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

பின்னர் களமிறங்கிய டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 2 பௌண்டரீஸ் மற்றும் 3 சிக்சர்கள் என மொத்தமாக 44 ரன்களை எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இருப்பினும் டெல்லி கேபிட்டல்ஸ் அணியால் நிர்ணயித்த 20 ஓவர்கள் 186 என்ற இலக்கை எட்டமுடியவில்லை.

இதனால் 20 ஓவர்கள் முடிவில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி 5 விக்கெட்கள் இழப்பிற்கு 173 ரன்களை எடுத்தது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் அதிகபட்சமாக சாஹல் மற்றும் நந்த்ரே பர்கர் ஆகியோர் தலா 2 விக்கெட்கள் வீழ்த்தினர். அதேபோல் ஆவேஷ் கான் 1 விக்கெட்டை வீழ்த்தினார்.

இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் ஆட்டநாயகன் விருது 84 ரன்களை அடித்த ராஜஸ்தான் வீரர் ரியான் பராக்கு வழங்கப்பட்டது.

Tags: t20ipl 20242024 IPL: Rajasthan Royals win!
ShareTweetSendShare
Previous Post

நமது நாட்டைக் கூறு போட்டு அழித்தது காங்கிரஸ் கூட்டணி! – அண்ணாமலை குற்றச்சாட்டு

Next Post

மத அடிப்படையில் துன்புறுத்தப்பட்டவர்களுக்கு குடியுரிமை திருத்த சட்டம் மூலம் நிவாரணம் : ஜெகதீப் தன்கர்

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies