ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய நபரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே-யில் கடந்த 1-ஆம் தேதி அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடித்தன. இதில் 10 பேர் காயமடைந்தனர். இது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அப்பகுதியில், இருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகள் மூலம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். மேலும் அவர்கள் பயிற்சி பெற்ற இடத்திலும் விசாரணை நடத்தினர். அப்போது சில தடயங்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது. மேலும், பெங்களூரு, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர்.
இந்நிலையில், இச்சம்பவத்தில், மூளையாக செயல்பட்ட முசம்மில் ஷரீப் ஹூசைன் என்பவரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அவனிடம் தீவிர விசாரணை வருகின்றனர்.