நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பால் திடீர் மரணம்!
Oct 22, 2025, 12:28 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நடிகர் டேனியல் பாலாஜி மாரடைப்பால் திடீர் மரணம்!

Web Desk by Web Desk
Mar 30, 2024, 12:15 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரபல நடிகர் டேனியல் பாலாஜி தனது 48-வது வயதில் திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்தார். தமிழ் சினிமாவில் வில்லன் கதாபாத்திரத்திற்கு தனி ஒரு அடையாளம் கொடுத்த நடிகர்களில் டேனியல் பாலாஜியும் ஒருவர்.

இவர் தமிழ் சினிமாவில் பிரபல வில்லன்களில் ஒருவராக இருந்தாலும், ஆரம்பத்தில் புரொடக்ஷன் மேனேஜராக சினிமா துறையில் நுழைந்தார்.

திரைத்துறையில் நடிகராக அறிமுகம் ஆவதற்கு முன்பு பிரபல சின்னத்திரையில் தடம் பதித்தார். தனியார் தொலைக்காட்சியில், நடிகை ராதிகா தயாரித்து நடித்த சித்தி தொடரில் டேனியல் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அந்த கதாபாத்திரத்தில் தனித்துவ முத்திரை பதித்ததால், பாலாஜி என்ற அவரின் பெயர் டேனியல் பாலாஜியாக மாறியது. அதேபோல் இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 40-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் காக்க காக்க, பொல்லாதவன், வேட்டையாடு விளையாடு, பைரவா, பிகில் போன்ற திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனி இடம் பிடித்தார்.

இந்நிலையில், நேற்றிரவு திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக, சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, சென்னை புரசைவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக டேனியல் பாலாஜியின் உடல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இவர், மறைந்த பிரபல நடிகர் முரளியின் சகோதரர் ஆவார்.

சினிமா துறையில் வில்லன் கதாபாத்திரத்தில் வசன உச்சரிப்பு, உடல் மொழி என தனித்துவத்துடன் அடையாளம் பதித்த டேனியல் பாலாஜியின் இழப்பு தமிழ் சினிமாவிற்கு பேரிழப்பு என திரைத்துறையினர் கூறுகின்றனர்.

மேலும் அவருடைய மறைவுக்கு சினிமா துறையினர், ரசிகர்களும் அவர் நடித்த கதாபாத்திரங்களை குறிப்பிட்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Tags: cineamaActor Daniel Balaji dies suddenly due to heart attack!
ShareTweetSendShare
Previous Post

கடற்கொள்ளையர்களிடம் சிக்கிய பாகிஸ்தானியர்களை மீட்ட இந்திய கடற்படை!

Next Post

சாமானிய மக்களின் முன்னேற்றத்திற்காகக் குரல் கொடுப்பவர் தங்கர் பச்சான்! – அண்ணாமலை பிரச்சாரம்

Related News

தயார் நிலையில் தேசிய பேரிடர் மீட்பு குழு – அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்

ஏற்கனவே ஹெச்-1 பி விசா வைத்திருப்போர் கட்டணம் செலுத்த தேவையில்லை – அமெரிக்கா விளக்கம்!

100 கனஅடி உபரி நீர் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறப்பு!

வடகிழக்கு பருவமழை : கண்காணிப்பு அதிகாரிகள் 12 மாவட்டங்களுக்கு நியமனம்!

கோவை : அரசு பேருந்து மோதி இளம்பெண் உயிரிழப்பு!

மணிப்பூர் : வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது நிங்கோல் சகோபா திருவிழா!

Load More

அண்மைச் செய்திகள்

புதுச்சேரியில் கனமழை : பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!

செம்பரம்பாக்கம் ஏரி மாசடையும் அபாயம்!

மோசமான வானிலை : மரக்காணம் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை!

கடலூரில் அதி கனமழை : பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!

செங்கல்பட்டு, கடலூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

நீச்சல் குளம் போல் மாறிய பூந்தமல்லி மேம்பாலம்!

கும்பகோணத்தில் கனமழை : குளம் போல் தேங்கிய மழைநீர்!

ஆஃபீஸ் பாய் டூ CEO : மெய்சிலிர்க்க வைத்த இளைஞரின் வெற்றி பயணம்…!

அமெரிக்காவை முந்தும் சீனா : மிகப்பெரிய ராணுவ போக்குவரத்து விமானம் வடிவமைப்பு!

அமெரிக்க வரி விதிப்பை புதிய வாய்ப்பாக மாற்றிய இந்தியா : பிற நாடுகளுக்கு ஏற்றுமதியை அதிகரித்து துணிச்சல் முயற்சி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies