எல்.கே. அத்வானி உள்ளிட்ட 4 பேருக்கு பாரத ரத்னா விருது வழங்கினார் குடியரசுத் தலைவர்!
Mar 15, 2026, 02:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

எல்.கே. அத்வானி உள்ளிட்ட 4 பேருக்கு பாரத ரத்னா விருது வழங்கினார் குடியரசுத் தலைவர்!

Murugesan M by Murugesan M
Mar 30, 2024, 01:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், மறைந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் உள்ளிட்ட 4 பேருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

மத்திய அரசின் சார்பில், ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு பல விருதுகள் வழங்கப்படுகின்றன. இவற்றில், மிகமுக்கியமானது 4 விருதுகள் தான். அவை பத்மஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன், பாரத ரத்னா ஆகியன.

இதில், ‘பாரத ரத்னா’ விருதுதான் நாட்டிலேயே மிக உயரிய விருதாகும். முன் எப்போதும் இல்லாத வகையில், இந்த ஆண்டு ஐந்து தலைவர்களுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டது.

அதன்படி, நாட்டின் முன்னாள் துணைப் பிரதமரும், மூத்தத் தலைவருமான எல்.கே. அத்வானிக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டது. இதேபோல், மறைந்த பீகார் முன்னாள் முதல்வர் கர்பூரி தாக்கூர், மறைந்த முன்னாள் பிரதமர் சௌத்ரி சரண்சிங், மறைந்த முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்மராவ், தமிழ்நாட்டைச் சேர்ந்த மறைந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் ஆகியோருக்கும் பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், மறைந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் உள்ளிட்ட 4 பேரின் குடும்பத்தினரிடமும், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பாரத ரத்னா விருதை வழங்கி கௌரவித்தார்.

டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், பாரத பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மறைந்த முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவுக்கு அறிவிக்கப்பட்ட விருதை, அவரது மகன் பி.வி.பிரபாகர் ராவ் பெற்றுக் கொண்டார். இதேபோல், மறைந்த முன்னாள் பிரதமர் சௌத்ரி சரன்சிங்-கிற்கு அறிவிக்கப்பட்ட விருதை, அவரது பேரன் ஜெயந்த் சிங் பெற்றுக்கொண்டார்.

மறைந்த பீகார் முன்னாள் முதல்வர் கர்பூரி தாக்கூருக்கு அறிவிக்கப்பட்ட விருதை, அவரது மகன் ராம்நாத் தாக்கூர் பெற்றுக் கொண்டார். மேலும், தமிழகத்தைச் சேர்ந்த மறைந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு அறிவிக்கப்பட்ட விருதை, அவரது மகள் நித்யா ராவ் பெற்றுக்கொண்டார்.

வயது மூப்புக் காரணமாக, நாட்டின் முன்னாள் துணைப் பிரதமரும், மூத்தத் தலைவருமான எல்.கே. அத்வானிக்கு, அவருடைய வீட்டிற்கு நேரில் சென்று பாரத ரத்னா விருது வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Tags: President Draupadi MurmuLK President awarded Bharat Ratna to 4 people including Advani!
ShareTweetSendShare
Previous Post

சாமானிய மக்களின் முன்னேற்றத்திற்காகக் குரல் கொடுப்பவர் தங்கர் பச்சான்! – அண்ணாமலை பிரச்சாரம்

Next Post

தமிழகத்தில் இயல்பைவிட வெப்பத்தின் அளவு அதிகரிக்கும்: வானிலை மையம்

Related News

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies