ஆதிஜெகநாத பெருமாள் ரூ.1 கோடி மதிப்புள்ள கோயிலில் நகைகள் மாயம்!
Mar 15, 2026, 06:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆதிஜெகநாத பெருமாள் ரூ.1 கோடி மதிப்புள்ள கோயிலில் நகைகள் மாயம்!

Murugesan M by Murugesan M
Mar 30, 2024, 02:43 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயிலில் ரூ.1 கோடி மதிப்புள்ள 952 கிராம் தங்க நகைகள், 2400 கிராம் வெள்ளி நகைகள் மாயம்.

ராமநாதபுரம், திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயில் பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் 96 வது திவ்ய தேசமாக உள்ளது.

இக்கோவிலில் ஸ்ரீ ராமர் சயன நிலையில் இருக்கிறார். இது இத்தலத்தின் சிறப்பம்சமாக உள்ளது. தசரதன் பிரதிஷ்டை செய்த நாகலிங்கம் இன்றும் கோயிலில் உள்ளது.

இத்தனை சிறப்பு வாய்ந்த இத்தலத்தில் 1 கோடி மதிப்புள்ள நகைகள் மாயமாகியுள்ளது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இக்கோயிலில் மூலவருக்கும், தாயாருக்கும் அணிவிக்கப்படும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம், வெள்ளி நகைகளை, கோயிலில் உள்ள பாதுகாப்பு பெட்டகம் மற்றும் ராமநாதபுரம் அரண்மனையில் உள்ள அறங்காவலர் பெட்டகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

இந்த பெட்டகம் மற்றும் அதன் சாவி ஆகியவை சீனிவாசன் என்ற ஸ்தானிகர் வைத்து இருப்பது வழக்கம். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு, ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தானத்தின் திவானும், நிர்வாக செயலாளருமான பழனிவேல் பாண்டியன் நகைகளை ஆய்வு செய்தார்.

நகைகள் கணக்கெடுப்பின் போது 952 கிராம் தங்க நகைகள், 2400 கிராம் வெள்ளி நகைகள் மாயமானது தெரியவந்துள்ளது. இதனையடுத்து சீனிவாசனிடம் விசாரணை நடத்தப்பட்டது. தொடர்ந்து, அவரை பழனிவேல் பாண்டியன் சஸ்பெண்ட் செய்தார்.

இச்சூழ்நிலையில், ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி.,யிடம் 30 வகையான தங்க நகைகள், 16 வெள்ளி நகைகள் காணவில்லை எனவும், இவற்றின் மதிப்பு ரூ.1 கோடி என பழனிவேல் பாண்டியன் புகார் அளித்தார். இதன் அடிப்படையில், மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Adi Jagannath Perumal Temple worth Rs.1 crore jewels magic!
ShareTweetSendShare
Previous Post

சென்னை மக்களே உஷார்: OMR சாலையில் போக்குவரத்து மாற்றம்!

Next Post

திமுகவும், அதிமுகவும் கள்ளக் கூட்டணி: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

Load More

அண்மைச் செய்திகள்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies