UAPA வழக்கில் நியூஸ்க்ளிக் நிறுவனர் பிரபீர் புர்கயிஸ்தாவுக்கு எதிராக டெல்லி காவல்துறை 8,000 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
நியூஸ்க்ளிக் மற்றும் அதன் நிறுவனர் பிரபீர் புர்கயிஸ்தா மீது, சீனாவுக்கு ஆதரவான பிரச்சாரத்திற்காக பெரும் தொகையைப் பெற்றதாகக் கூறப்படும் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
நியூஸ் கிளிக் செய்தி இணையதளத்திற்கு எதிராக, சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம், 1967 இன் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில், டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு, தொடக்க குற்றப்பத்திரிகை இன்று சமர்ப்பித்தது.
“2018 முதல் 2021 வரையிலான மூன்றாண்டு காலகட்டத்தில் அமெரிக்கா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் உள்ள நிறுவனங்களிடமிருந்து நியூஸ்கிளிக் நிறுவனத்துக்கு ரூ.86 கோடி நிதியுதவி வந்துள்ளது. நியூஸ்கிளிக் நிறுவனத்துக்கு நிதியுதவி வழங்கிய நிறுவனங்களை ஆய்வு செய்கையில், சீன ஆதரவாளர் நெவில் சிங்கத்துக்கு தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இது தொடர்பான வழக்கில் பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் கூடுதல் செஷன்ஸ் நீதிபதி டாக்டர் ஹர்தீப் கவுர் முன் 8000 பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிகை இணைப்புகள் சமர்ப்பிக்கப்பட்டது.
நியூஸ் கிளிக்கின் நிறுவனரும் தலைமை ஆசிரியருமான பிரபீர் புர்காயஸ்தா மற்றும் பிபிகே நியூஸ் கிளிக் ஸ்டுடியோ பிரைவேட் லிமிடெட் ஆகியோர் குற்றம் சாட்டப்பட்டவர்கள் என குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக சிறப்பு அரசு வழக்கறிஞர்கள் வழக்கறிஞர் அகந்த் பிரதாப் சிங் மற்றும் சூரஜ் ரதி ஆகியோர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.