மத்திய பிரதேச மாநில காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரும், எம்எல்ஏ-வுமான கமலேஷ் ஷா பாஜகவில் இணைந்துள்ளார்.
மத்திய பிரதேசத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில முதல்வர் மோகன் யாதவ், பல்வேறு மக்கள் நலத் திட்டப் பணிகளை செய்து வருகிறார். மாநிலத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வதற்கு தொடர்ந்து, பணியாற்றி வருகிறார்.
இதன் காரணமாக, மாற்று கட்சியினர் பலர், அம்மாநில பாஜக-வில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில், மத்தியப் பிரதேச காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவைரும், சட்டமன்ற உறுப்பினருமான கமலேஷ் ஷா பாஜகவில் இணைந்துள்ளார். இவர் சிந்த்ரவாரா மாவட்டத்தில் உள்ள அமர்வாரா தொகுதியில் இருந்து மூன்று முறை எம்எல்ஏ-வாக தேர்வு செய்யப்பட்டார்.
மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ், மாநிலத் தலைவர் விஷ்ணு தத் சர்மா ஆகியோர் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். அவருடன் அவரது மனைவியும், ஹர்ராய் நகர் பாலிகா தலைவருமான மாத்வி ஷா மற்றும் கமலேஷ் ஷாவின் சகோதரியும், மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினருமான கேசர் நேதம் ஆகியோரும் பாஜவில் இணைந்தனர்.