மக்களவைத் தேர்தல்: தலைமைத் தேர்தல் அதிகாரி எச்சரிக்கை!
Jun 14, 2026, 07:20 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மக்களவைத் தேர்தல்: தலைமைத் தேர்தல் அதிகாரி எச்சரிக்கை!

Murugesan M by Murugesan M
Mar 30, 2024, 06:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மக்களவைத் தேர்தலையொட்டி, தேர்தல் நடத்தை விதிகளை மீறுவோர் எந்தக் கட்சியினர் என்றாலும், அவர்கள் மீது பாரபட்சமின்றி உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “குன்னூர் அருகே உள்ள சோதனைச் சாவடியில், திமுக வேட்பாளர் ஆ. ராசாவின் தேர்தல் பிரச்சார ஊர்வலத்தை சோதனை செய்வதில், கவனக்குறைவாக இருந்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.

ஊடகச் செய்திகளின் அடிப்படையிலும், நீலகிரி தேர்தல் நடத்தும் அதிகாரி மற்றும் செலவினப் பார்வையாளர் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையிலும், பறக்கும் படையின் தலைமைப் பொறுப்பில் இருந்த அதிகாரி கீதா இடைக்காலப் பணிநீக்கம் செய்யப்பட்டார்.

அவரது தேர்தல் பணி செயல்பாடுகளில், குறைபாடு காணப்பட்டதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. மேலும், அந்த ஒட்டுமொத்த பறக்கும்படையும் மாற்றப்பட்டுள்ளது. தேர்தல் செலவினப் பார்வையாளரும் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டார். அங்கிருந்த வீடியோ கண்காணிப்புக் குழுக்கள் எடுத்த 2 வீடியோ புகைப்படங்களையும் அவர் பார்த்தார்.

அந்த வீடியோக்களும், ஊடகங்கள் காட்டிய வீடியோக்களையும் பார்த்தபோது, தற்செயலாக மேலோட்டமான சோதனை மேற்கொள்வதுபோல் காணப்படுகிறது. ஊர்வலத்தில் வந்த மற்ற வாகனங்கள் சோதனை செய்யப்படவில்லை.

பிரபலமான வேட்பாளர்கள் மீது மென்மையான அணுகுமுறையை மேற்கொள்வதை தேர்தல் ஆணையம் மோசமான குற்றமாக எடுத்துக்கொள்ளும். தேர்தல் நடத்தை விதிகளை மீறுவதாக காணப்பட்டால், அனைத்து அரசியல் கட்சி வேட்பாளர்கள் மேல் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

Tags: tn ceoLok Sabha Elections: Chief Electoral Officer Warning!
ShareTweetSendShare
Previous Post

அமெரிக்க விசா கட்டணங்கள் உயர்வு!

Next Post

பாஜக-வில் இணைந்த காங்கிரஸ் எம்எல்ஏ!

Related News

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

Load More

அண்மைச் செய்திகள்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies