ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள அனந்த்நாக்கில் 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மார்த்தாண்ட சூரியக் கோயில் பக்தர்களுக்கு திறக்கப்படவுள்ளது.
ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள அனந்த்நாக்கில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு அழிக்கப்பட்ட 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மார்த்தாண்ட சூரியன் கோயில் , பக்தர்கள் மற்றும் பார்வையாளர்களுக்காக மீட்டெடுக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 1 ஆம் தேதி நடைபெற உள்ள அரசு அதிகாரிகளின் உயர்மட்டக் கூட்டத்தில், கோயிலின் பாதுகாப்பு குறித்து இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது.
மார்த்தாண்ட சூரியன் கோயில் வளாகத்தில் பேரரசர் லலிதாதித்ய முக்தாபிதாவின் சிலையை நிறுவுவது குறித்தும் அதிகாரிகள் ஆலோசனை நடத்தவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிவிப்பில், ” அனந்த்நாக்கில் அமைந்துள்ள மார்த்தாண்ட சூரியன் கோயிலின் வளாகத்தில் பேரரசர் லலிதாதித்ய முக்தாபிதாவின் சிலையை நிறுவுவதுடன், காஷ்மீரில் உள்ள பழமையான கோயில்களின் பாதுகாப்பு, புனரமைப்பு தொடர்பான விவகாரம் குறித்து விவாதிக்க கலாச்சாரத் துறை ஒரு கூட்டத்தை நடத்த வேண்டும்” என்று ஜம்மு காஷ்மீர் அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 ஆம் நூற்றாண்டின் மன்னர் லலிதாதித்ய முக்தபாதாவில் கட்டப்பட்ட பிரமாண்டமான கோயில் இந்தியாவின் மிகப் பழமையான சூரியக் கோயிலாக இன்று உயர்ந்து நிற்கிறது.
இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையால் பாதுகாக்கப்பட்ட இந்த கோவில் பண்டைய ஆன்மீக பாரம்பரியத்தின் சின்னமாகும்.