கம்யூனிசம் என்பது, வளர்ச்சித் திட்டங்களுக்கு எதிரானது! - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sep 9, 2026, 10:55 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கம்யூனிசம் என்பது, வளர்ச்சித் திட்டங்களுக்கு எதிரானது! – அண்ணாமலை குற்றச்சாட்டு

Murugesan M by Murugesan M
Mar 30, 2024, 08:01 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நாகப்பட்டினம் நாடாளுமன்றத் தொகுதியில், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில், தாமரை சின்னத்தில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர், S.G.M.ரமேஷை ஆதரித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தேர்தல் பிரச்சாரத்தை  மேற்கொண்டார்.

அங்கு திறந்தவெளி வாகனத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை பொதுமக்கள் மத்தியில் மோடியின் தலைமையிலான அரசு செய்துள்ள சாதனைகளை எடுத்துரைத்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

கூட்டத்தில் பேசிய அண்ணாமலை,

கம்யூனிசம் என்பது, வளர்ச்சித் திட்டங்களுக்கு எதிரானது. இத்தனை ஆண்டுகளாக, நாகப்பட்டினம் தொகுதி வளர்ச்சியடையாமல் இருக்கக் காரணம், இங்குள்ள கம்யூனிஸ்ட் பாராளுமன்ற உறுப்பினர்கள்தான். பிரச்சினைகள் அதிகமாக இருக்கும் தொகுதி, நாகப்பட்டினம். உப்பு கலந்து, குடிநீருக்குக் கூடப் பிரச்சினை இருக்கும் தொகுதி.

நாகப்பட்டினம் பாராளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் என் மண் என் மக்கள் யாத்திரையின்போது பயணம் செய்து, தொகுதி மக்களைச் சந்தித்து, அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து அறிந்துள்ளோம்.

எனவேதான், நாகப்பட்டினம் தொகுதியை முன்னேற்ற, நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் சிறப்புக் கவனம் செலுத்தி, சமீபத்தில் தான் சிமெண்ட் சாலைகளையும், பல ஆயிரம் கோடி மதிப்பில் நெடுஞ்சாலைகளையும் நாகப்பட்டினம் தொகுதியில் அமைத்து கொடுத்துள்ளார். வளர்ச்சித் திட்டங்களை மேலும் அதிகரிக்கவே, சகோதரர்  S.G.M.ரமேஷ் அவர்களை, நாகப்பட்டினம் தொகுதி வேட்பாளராக அறிவித்துள்ளார்.

வரும் பாராளுமன்றத் தேர்தலில், மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள், 400 இடங்களுக்கும் மேல் வெற்றி பெற்று, மூன்றாவது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்கவிருப்பது உறுதி. நாகப்பட்டினம் தொகுதிக்கான வளர்ச்சித் திட்டங்களைக் கேட்டுப் பெறவும், விரைவுபடுத்தவும், நமது மக்களின் குரலை, நாடாளுமன்றத்தில் ஒலிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் வேண்டும்.

எனவே, பாரதப் பிரதமர் கரங்களை வலுப்படுத்த, 400க்கும் அதிகமான பாராளுமன்ற உறுப்பினர்களில் ஒருவராக, நாகப்பட்டினத்தில் இருந்து சகோதரர்  S.G.M.ரமேஷ் அவர்களைத், தாமரை சின்னத்தில் வாக்களித்து, பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

பாரதப் பிரதமர்  நரேந்திர மோடி அவர்கள் மூன்றாவது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்க, கடும் உழைப்பாளிகளான நாகப்பட்டினம் நாடாளுமன்றத் தொகுதி மக்கள் நிச்சயம் துணை இருப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது எனத் தெரிவித்தார்.

Tags: bjp k annamalaiTNBJP annamalai election campaignbjp
Share
Tweet
SendShare
Previous Post

தமிழின் பெயரைச் சொல்லியே புளுகி வரும் முதல்வர் ஸ்டாலின்! – எல். முருகன் குற்றச்சாட்டு

Next Post

8 ஆம் நூற்றாண்டின் மார்த்தாண்ட சூரியக் கோவில் திறக்கப்படவுள்ளது!

Related News

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரூ.10, 021 கோடி மதிப்பில் 5 ரயில்வே திட்டங்கள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பாஜகவிடம் திருமாவளவன் அமைச்சர் பதவி கேட்டதை சொல்ல வேண்டி வரும் – பாஜக தேசிய செயலாளர் வெங்கடேசன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

இன்றைய தங்கம் விலை!

சட்டப்பேரவையில் ரத்தீஷ் பெயரை முதல்வர் பதிவு செய்தது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கை – துணை நிலை ஆளுநர், முதல்வர் ஆலோசனை!

6G நெட்வொர்க் உருவாக்கம் : அமெரிக்கா தலைமையிலான சர்வதேச முயற்சியில் இணைந்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை கடும் பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies